சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்துகொண்ட இலங்கை வீரர்
இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மெல்போர்னில் ஆர்த்ரோஸ்கோபிக் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளார். பிரபல அவுஸ்திரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் மார்க் பிளாக்னியால் மேற்கொள்ளப்பட்ட அவரது சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும், தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார். இன்னும் 3 மாதங்களில் அவரை நடவடிக்கைக்குக் கொண்டு வருவோம் என நம்புகிறோம் என பேராசிரியர் அர்ஜுன டி சில்வா மேலும் தெரிவித்தார்.
Continue Reading