இந்திய அணி 56 ஓட்டங்களால் வெற்றி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்திய அணி 56 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 62 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர். விராட் கோலி இருபதுக்கு20 […]

Continue Reading

நெதர்லாந்து அணிக்கு 180 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணிக்கு இந்திய அணி 180 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 62 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் நெதர்லாந்து […]

Continue Reading

அசித்த பெர்ணான்டோவிற்கு ஐசிசி அனுமதி

அசித்த பெர்ணான்டோவை இலங்கை அணியில் இணைத்து கொள்ள ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது. பினுர பெர்ணான்டோவிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக அசித்த பெர்ணான்டோவை அணியில் இணைக்க ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.

Continue Reading

தென்னாபிரிக்க அணி புதிய சாதனை!

நடைபெறும் உலகக் கிண்ண போட்டிகளில் தென்னாபிரிக்க அணி புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது. தென்னாபிரிக்க அணியின் Quinton de Kock மற்றும் Rilee Rossouw ஆகிய இருவரும் இணைந்து 168 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றே இந்த புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்துள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பாக Quinton de Kock 63 ஓட்டங்களையும் Rilee Rossouw […]

Continue Reading

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளும் ஆபாசப்படங்கள் பார்க்கின்றனர்! பாப்பரசர்

மதகுருமார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளும் இணையத்தில் ஆபாசப் பாலியல் படங்களை பார்வையிடுவதாக பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் கூறியுள்ளதுடன் இது இதயங்களை பலவீனமாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். வத்திகானில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். மதகுருக்கள் மற்றும் பாதிரியார்கள், குருத்துவ மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு 86 வயதான புனித பாப்பரசர் பிரான்சிஸ் இந்நிகழ்வில் பதிலளித்தார். இதன்போது, கிறிஸ்தவர்களாக இருப்பதன் மகிழ்ச்சியை பகிர்வதில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என […]

Continue Reading

வங்காளதேசத்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்று – தென் ஆப்பிரிக்கா பேட்டிங்

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. சிட்னி, டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேச அணிகளி மோதுகின்றன. இந்த போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Continue Reading

ஈரானில் வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச் சூடு – 15 பேர் உயிரிழப்பு

ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ந்தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தின் 40வது நாளான நேற்று அந்நாட்டின் இரண்டாவது புனிதத் தலமான ஷா செராக் மசூதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும், அரசுத் செய்தி […]

Continue Reading

ரஷியா – உக்ரைன் போர்: அணு ஆயுதங்களை இருதரப்பும் பயன்படுத்த கூடாது – இந்தியா வலியுறுத்தல்

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு உக்ரேனிய நகரங்களை குறிவைத்து பதிலடி கொடுக்கும் ஏவுகணை தாக்குதல்களை ரஷியா நடத்தி வருகிறது. உக்ரைனில் போர் தீவிரம் அடைவதால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் – இந்திய தூதரகம் அவசர உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைனின் அணு மின் நிலையங்களில் அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி ‘நாசகார’ ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்து வருவதாக ரஷியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இதை மறுத்துள்ள உக்ரைன் அணுசக்தி அமைப்பு ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள […]

Continue Reading

“டுவிட்டர் தலைமை அதிகாரி” என்று டுவிட்டரில் பெயரை மாற்றிய எலான் மஸ்க்!

கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க். இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அறிவித்தார். பின்னர் சில வாரங்களிலேயே […]

Continue Reading

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலப்பு – டவ் உள்ளிட்ட சாம்போக்களை திரும்பப்பெற்றது யுனிலீவர்!

புற்றுநோயை ஏற்படுத்தும் பென்சின் என்ற இரசாயனம் வேதிப்பொருள் கலந்ததன் காரணமாக தனது தயாரிப்புகளை பிரபல யுனிலீவர் நிறுவனம் திரும்பபெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் உற்பத்தியில் பென்சீன் என்ற ஆபத்தான வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், புற்றுநோய் ஏற்படும் என்று அமெரிக்காவின் எஸ்டி அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்பு தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி அவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், அக்டோபர் 2021 […]

Continue Reading

மலைப்பாம்பின் உடலுக்குள் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

இந்தோனேஷியாவில் பெண்ணொருவரை மலைப்பாம்பு ஒன்று கொன்று விழுங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அப்பாம்பிற்குள் அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ஜஹ்ரா எனும் இப்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை இறப்பர் தோட்டத்தில் வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோது இவ்வாறு உயிரிழந்துள்ளார். இப்பெண் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து அவரை கண்டுபிடிப்பதற்கு பல குழுக்கள் அனுப்பப்பட்டன. மறுநாள், வயிறு உப்பிய நிலையில் மலைப்பாம்பு ஒன்றை கிராமவாசிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அப்பாம்மை கொலை செய்து […]

Continue Reading

வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து – சீனாவில் பயன்பாட்டுக்கு!

சீனாவில் வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவை முற்றாக ஒழிக்க அந்த நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்துவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும், 57 சதவீதம் பேர் […]

Continue Reading