உக்ரைன் மீது இதுவரை 400 டிரோன்களை பயன்படுத்தி ரஸ்யா தாக்குதல்!

உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று பேசும்போது கூறியதாவது:- உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றுள் 60-70 சதவீதம் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எற்றிச்சென்ற 170க்கும் அதிகமான […]

Continue Reading

பிலிப்பைன்சை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக அந்த நாடு உலகின் பேரழிவு நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு லுசோன் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள அப்ரா மாகாணத்தின் லகாயன் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் […]

Continue Reading

தீப்பற்றும் அபாயம் – 71000 வாகனங்களை மீளழைக்கும் கியா!

பிரபல கொரிய வாகன உற்பத்தியாளரான கியா நிறுவனம் சுமார் 71,000 விளையாட்டு பயன்பாட்டு வாகனமான கியா ஸ்போடேஜ் ரக மகிழுந்துகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. குறித்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் அலகை சுற்றி தீப்பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 71,000 Kia-Sportage ரக SUVகளை திரும்பப் பெறுவதற்கு Kia நிறுவனம் தீர்மானித்துள்ளது. தீ அபாயங்கள் காரணமாக 2016 ஆம் ஆண்டில் வாகனங்கள் […]

Continue Reading

பந்து வீச்சாளர் தரவரிசையில் மகேஷ் தீக்ஷனா முன்னேற்றம்: பின்தங்கினார் வனிந்து ஹசரங்க

கொழும்பு, ஒக். 26: சர்வதேச கிரிக்கட் நிறுவனம் பந்து வீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் மகீஷ் தீக்ஷன ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இன்னொரு சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, மூன்றாவது இடத்திலிருந்து ஆறாவாது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். அதேநேரம், துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை அணி வீரர் பதும் நிசங்க எவ்வித மாற்றமும் இன்றி எட்டாவது இடத்தில் தொடர்ந்தும் உள்ளார்.

Continue Reading

வாரிசு படத்தின் புகைப்படங்களை கொண்டாடும் ரசிகர்கள்

இந்தியா,ஒக் 26 வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ […]

Continue Reading

நாட்டில் 62,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம்

கொழும்பு, ஒக் 26 நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 62,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் சிறுவர்களாகவும், 50 வயதுக்கு குறைந்தவர்களாகவும் உள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (ஒக் 26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் இதுவரை 62,000க்கும் அதிகமான டெங்கு […]

Continue Reading

மழைக்காலத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்கும்: கொரோனா தடுப்பு அதிகாரி பேச்சு

நியூயார்க், ஒக் 26 கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஆஷிஷ் ஜா, அமெரிக்காவில் மழைக்காலத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்கும் என்று கூறினார். இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால், தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு […]

Continue Reading

நாட்டுக்கு வரும் 12500 மெற்றிக் தொன் யூரியா கப்பல்

கொழும்பு,ஒக் 26 12500 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.உலக வங்கி வழங்கிய 110 மில்லியன் டொலர் கடன் உதவியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட உரங்களின் முதல் தொகுதி இதுவாகும். இரண்டாவது டெண்டரின் கீழ் இலங்கையில் அடுத்த மாதம் 120,000 மெற்றிக் தொன் யூரியா பெறப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

சுற்றாடல் அமைச்சர் ராஜினாமா

பிரித்தானியா,ஒக் 26 பிரித்தானியாவின் சுற்றாடல் அமைச்சராக கடமையாற்றிய ரணில் ஜயவர்தன அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன்படி அந்த அமைச்சில் மிகக் குறுகிய காலம் பதவி வகித்த அமைச்சர் ரணில் ஜயவர்தன ஆவார். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவளித்த ஜயவர்தன, தனது இராஜினாமா கடிதத்தை புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு அனுப்பியிருந்தார்.

Continue Reading

இலங்கை அணியில் இணையவுள்ள புதிய வீரர்கள்

கொழும்பு,ஒக் 26 இலங்கை அணிக்கு மேலும் புதிய வீரர்கள் மூவர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தொடர்ச்சியாக உபாதைக்குள்ளாகின்றமையினால் மேலும் 03 வீரர்கள் இன்று இரவு அவுஸ்திரேலியா நோக்கி புறப்படவுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல, வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ மற்றும் மதீஷ பத்திரன ஆகியோரே இன்று இரவு அவுஸ்திரேலியா நோக்கி புறப்படவுள்ளனர்.

Continue Reading

இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி

இலங்கை,ஒக் 26 உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் இடம்பெறவிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளமையினால் நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு தலா ஒவ்வொருப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தை வகித்த இலங்கை அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Continue Reading

டி20 உலகக்கோப்பை: மழை காரணமாக நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து

மெல்போர்ன்,ஒக் 26 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சூப்பர்12 சுற்றில் இன்று நடைபெற இருந்த போட்டியில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்தன. மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading