இரண்டு ஆண்டுகளில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெற்றோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும்: நிதின் கட்கரி

புதுடெல்லி, மார்ச் 31 நாட்டில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெற்றோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால், எம்.பி.க்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும் என்றும் கட்கரி கூறினார். இறக்குமதி மாற்று, குறைந்த செலவில் அதிக செயல்திறன், மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவையே அரசாங்கத்தின் […]

Continue Reading

எரிபொருளின் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

டெல்லி, மார்ச் 31 எரிபொருள் விலை உயர்வை கண்டித்து டெல்லி நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி தலைமையில் வியாழக்கிழமை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் வியாழக்கிழமை முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி சார்பில் […]

Continue Reading

பங்களாதேஸுக்கு, இலங்கை கிரிக்கெட் அணி பயணம்

கொழும்பு, மார்ச் 31 பங்களாதேஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் ஒரு கட்டமாக இந்த தொடர் இடம்பெறவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மே மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் சட்டோக்ராமில் நடைபெறவுள்ளமையால் மே மாதம் 8ஆம் திகதி இலங்கை அணி பங்களாதேஸுக்கு பயணிக்கிறது. இரண்டாம் போட்டி டாக்காவில் மே 23ஆம் திகதி முதல் […]

Continue Reading

ரொஹிங்கிய இனப்படுகொலை: அமெரிக்காவின் அங்கீகாரத்தை வரவேற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

அமெரிக்கா, மார்ச் 31 மியான்மாரில் ரொஹிங்கியாக்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதத்தின் குற்றங்களை இனப்படுகொலை என்று அமெரிக்க இராஜாங்க செயலர் பிளிங்களின் அங்கீகரித்தை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் ஈழத்தமிழ் மக்களாகிய நாங்களும் ஒருமைப்பாட்டுடன் ரொஹிங்கியா மக்களின் கரங்களைப் பற்றிக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் தொகையான அட்டூழியத் தடுப்பிற்கான அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மியான்மார் இராணுவம் ரொஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைத்த சர்வதேச குற்றங்களை இனப்படுகொலை […]

Continue Reading

விண்வெளியில் 355 நாட்கள் தங்கியிருந்து பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்

அமெரிக்கா, மார்ச் 31  நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய். இவர் கடந்த 2021, ஏப்ரல் 9-ம் திகதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார். இவர் சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் (355 நாட்கள்) தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில் சர்வதேச விண்வெளியில் பணி […]

Continue Reading

ஐ.நா. அமைதிப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: பேர் பலி

கின்ஷாசா, மார்ச் 31 மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சி படைகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைதி காக்கும் பணிகளில் ஐ.நா. அமைதிப்படை ஈடுபட்டுள்ளது. ஐ.நா.வின் இந்த அமைதிப்படையில் பாகிஸ்தான் ராணுவமும் இடம்பெற்றுள்ளது. இதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலர் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு கிவு மாகாணத்தில் இருந்து, நேற்று முன்தினம் மாலை […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் கனமழை: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

சிட்னி, மார்ச் 31 ஆஸ்திரேலியாவில் இன்று பெய்த கனமழையால் சில நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அதே நேரத்தில் வேகமாக நகரும் வெள்ள நீர் ஆற்றின் கரைகளை உடைத்து மதகுகளை உடைத்தது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால், அந்நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனையடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தற்போது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஏற்கனவே […]

Continue Reading

செஞ்சிலுவை சங்க கட்டிடம் மீது ரஷ்யா தாக்குதல்

கிவ், மார்ச் 31  உக்ரைன் மீது ரஷ்யா 36-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சிலுவை சங்கம் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]

Continue Reading

உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்: ஐ.நா அகதிகள் ஆணையம்

நியூயார்க், மார்ச் 31 கடந்த மாதம் பெப்ரவரி 24-ந் திகதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை தொடங்கியது. தொடர்ந்து 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இதுவரை உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர், “நான் இப்போது உக்ரைனுக்கு வந்திருக்கிறேன். இந்த அர்த்தமற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு […]

Continue Reading

டெல்லியில் திராவிட கோட்டை தலைநிமிரும்: தமிழக முதல்வர் ஸ்டாலின்

சென்னை, மார்ச் 30 தமிழ் நாட்டின் முதல்வர் ஸ்டாலின் இந்தியப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா உள்ளிட்டோரை வியாழக்கிழமை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின், கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: டெல்லியில் திராவிட கோட்டை தலைநிமிரும். டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளேன். தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, […]

Continue Reading

இந்தியத் தயாரிப்பான நடுத்தர ஏவுகனைச் சோதனை வெற்றி

பாலசோர், மார்ச் தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல நடுத்தர ரக ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. இந்த ராணுவ பயன்பாட்டு வடிவ ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இச்சோதனை நடந்தது. வானில் அதிவேகத்தில் பறந்து சென்ற இலக்கு பொருளை அந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தரையில் இருந்து […]

Continue Reading

சர்வதேச கபடி போட்டியில் இலங்கை வெண்கலம்: யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கௌரவிப்பு

யாழ்ப்பாணம், மார்ச் 30 பங்களாதேசில் இடம்பெற்ற சர்வதேச கபடி போட்டியில் வென்ற இலங்கை ஆண்கள் கபடி அணியில் முன்னணி வீரராக திகழ்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர் ராசோ பென்சி  கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பேருந்து நிலையத்திலிருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு வாகன ஊர்தி பவனியாக அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

Continue Reading