கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் கடன் வாங்க பேச்சுவார்த்தை

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை எதிர்கொள்ளும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக நீண்ட கால கடன் அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் தொடர்பான பொருட்களை வாங்குவது குறித்து இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் செயல் தலைவர் அமைச்சர் சைஃப் அலனாஃபி மற்றும் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோருக்கு இடையே ஒரு கலந்துரையாடல் நடந்ததாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீண்ட கால கடன் அடிப்படையில் இலங்கைக்கு […]

Continue Reading

யாழில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம்

வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் காலபோகத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் (யாழ்ப்பாணம் மாவட்டம்) அஞ்சலாதேவி சிறீரங்கன் தெரிவித்துள்ளார். குறித்த நெற்செய்கைக்கு தேவையான சேதனப் பசளையினை விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்ய வேண்டிய கடப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கமைய விவசாய அமைச்சின் ஆலோசனை மற்றும் விவசாய திணைக்களத்தின் […]

Continue Reading

வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலைக்காக பவானந்தராஜாவுக்கு மிரட்டல்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம் முன்மொழிபவருக்கே வழங்கவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பு கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருத்துவமனை பதில் பணிப்பாளருக்கு வந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை […]

Continue Reading

நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் தொடருமா ?

தற்போது நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அதிகபட்சமாக 14 நாட்களுக்கு அப்பால் செல்லாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அமுலாக்கப்பட்டுள்ள 10 நாட்கள் முடக்கல் நிலைக்காகத்தான், 2,000 ரூபா வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு மாதத்திற்காகத்தான் 5,000 ரூபா வழங்கப்பட்டது. எனவே, தற்போது 10 நாட்களுக்கு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 அல்லது 5 நாட்களுக்கு நீடிக்குமா என்பது […]

Continue Reading

விரைவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

விரைவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பைஸர் போன்ற தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயம் குறித்து கலந்துரையாடி எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்றை எட்டவுள்ளதாக அவர் […]

Continue Reading

பிசிஆர் எடுத்தால் வீட்டிலேயே இருங்கள் வெளிக்கிட வேண்டாம் – சுகாதாரத் துறை

காய்ச்சல் உட்பட ஏனைய நோய் காரணங்களினால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும்வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளார்கள். தற்சமயம் அதிக எண்ணிக்கையிலானோர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு நோய்தொற்றுக்கு உள்ளாகி இறுதி அறிக்கை கிடைக்க முன்னர் தொழிலுக்குச் செல்பவர்களினால் பாரிய பாதிப்பு ஏற்படலாம் என்றும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading

வல்லிபுர கோவிலில் பழைய நிர்வாகத்தினரால் புதிய நிர்வாகத்தினருக்கு பிரச்சனை

வல்லிபுர ஆழ்வார் கோவிலின் பழைய நிர்வாகத்தினரின் அத்துமீறிய தலையீட்டில் 27.06.2021 சுகாதார விதிமுறைகளை மீறி பூசை இடம்பெற்றதாகவும் கடந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற பூசைக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என வல்லிபுரஆழ்வார் கோவில் புதிய நிர்வாக செயலாளர் வேலாயுதம் சிறிஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார். இன்றையதிம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது தற்போது கொரோனா மூன்றாவது அலை இடம்பெறுகின்ற நிலையில் […]

Continue Reading

பாடசாலைகள் அனைத்தும் எப்போது திறக்கப்படும்?

தற்பொழுது மூடப்பட்டு இருக்கின்ற பாடசாலைகள் அனைத்தையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மீளத்திறக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் பரவல் சம்பந்தமான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இதற்காக இந்த மாதம் முதல் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. அதே நேரத்தில் பத்து வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பு ஊசிகளைச் செலுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தற்போது குறைவடைந்து செல்கின்ற கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை […]

Continue Reading

கைது செய்யப்படுவார்களா தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

சாதாரணமாக மக்கள் வெளியிடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும்போது கைது செய்யப்படுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் அவ்வாறு நினைவுகூர்பவர்கள் ஏன் கைது செய்யப்படாதிருக்கின்றார்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பு கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் நடந்தது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அரசாங்கப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல சரியான பதிலை அளிக்கவில்லை. எனினும் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் கட்டிடத் […]

Continue Reading

கொக்குவிலில் வன்முறைக் கும்பல் அட்டகாசம்

கொக்குவில் மேற்கு பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கிருந்த பெறுமதியான பொருளிகளை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர். 6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் […]

Continue Reading

மாவையின் தலைமையில் வெடித்தது போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று யாழ் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. எரிபொருள் விலையேற்றம், விவசாயிகளுக்கான பசளை தட்டுப்பாடு, அரசியல் கைதிகளின் விடுதலை , கப்பல் விபத்தினால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வெளிநாட்டவர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் தமிழர்களின் காணி விடுவிப்பு போன்றவற்றினை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி எரிபொருள் விலையேற்றத்தினை வெளிப்படுத்தும்  வகையில் துவிச்சக்கர வண்டியில் தங்களுடைய பயணத்தினை […]

Continue Reading

அமைச்சுப்பதவியா மைத்திரி சொன்ன பதில்

அமைச்சராக தான் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார். அத்தோடு தான் ஒருபோதும் அமைச்சரவை அல்லது வேறு எந்த பதவிகளுக்காக அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அரசாங்கத்தில் எந்தவொரு பதவியாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார். பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் மைத்ரிபால சிறிசேன மற்றும் எஸ்.பீ.திஸாநாயக்க ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவிப் […]

Continue Reading