நயினாதீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நயினாதீவுக்கு சென்றிருந்தார். நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள போதிலும், நயினாதீவு நாகவிகாரைக்கு இதுவரை விஜயம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், விகாராதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க நேற்றைய தினம் ஜனாதிபதி நயினாதீவு நாக விகாரைக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலும் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading