முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி

கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் மனிதர்களை தாக்காது என கருதப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் […]

Continue Reading

அபுதாபியில் பறக்கும் டாக்சி வெற்றிகரமாக சோதனை: அடுத்த ஆண்டு அறிமுகம்

அபுதாபி:14 அமீரகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நாடு முழுவதும் வரும் காலக்கட்டங்களில் பறக்கும் டாக்சியை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் தற்போது துபாயை தொடர்ந்து அபுதாபியில் அமெரிக்காவின் ஆர்ச்சர் நிறுவனத்தின் மிட் நைட் ஏர் கிராப்ட் என்ற விமானம் அபுதாபியில் பறக்கும் டாக்சியாக இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதற்கட்டமாக […]

Continue Reading

நாட்டின் பொருளாதார வளர்ச்சி!

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் காட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிலையான விலையின் கீழ்  3,161,963 மில்லியன் ரூபாவாக பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3,329,583 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயம், தொழில்துறை […]

Continue Reading

கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 15 கோடி பறிமுதல்

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிவைத்து உஜ்ஜயினி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சோதனையின் போது ரூ.14.60 கோடி ரொக்கம், 7 கிலோ வெள்ளி, 7 நாடுகளின் கரன்சிகள், 10 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள் மற்றும் ஐபேட், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளியான பியூஷ் சோப்ரா தப்பியோடினார். போலீசார் […]

Continue Reading

ரஷியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய மாட்டோம் என சீன அதிபர் என்னிடம் தெரிவித்துள்ளார்: ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ரஷியா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் போர் தொடுத்தது. இன்னும் தாக்குதல் நடைபெற்றுதான் வருகிறது. ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை பெரிதும் நம்பியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. இதனால் உக்ரைன் தொடர்ந்து ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அதேவேளையில் வடகொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு மறைமுகமாக உதவி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ரஷியாவுக்கு உதவி செய்து வரும் நிறுவனங்களுக்கு எதிராக […]

Continue Reading

தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தை வாளியில் சடலமாக மீட்பு!

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தில் பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் வாளியில் கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு – அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாள பிரிவைச் சேர்ந்த வீரமுத்து (65) என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சங்கீதாவை (30), அருகில் உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து ஓர் […]

Continue Reading

பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கு தீர்வு: உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ரோம்:14 ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார். இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்குக்கும் இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர […]

Continue Reading

உக்ரைன் இதை செய்தால் உடனடி போர் நிறுத்தம்: உறுதி அளித்த ரஷிய அதிபர் புதின்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமைதிக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஜி-20 மாநாடு நடைபெறும் இத்தாலிக்கு சென்று தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் இரண்டு விசயங்களை செய்தால் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் என ரஷிய […]

Continue Reading

நேபாளத்தில் நிலச்சரிவு- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

நேபாளத்தில் கடந்த திங்கட்கிழமை பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. தப்லேஜங் மாவட்டம் பக்டாங்லங் ஊரக நகராட்சி பகுதியில் நேற்று இடைவிடாமல் மழை பெய்த நிலையில், நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் இடிபாடுகளில் 2 வீடுகள் புதைந்தன. இதில் ஒரு வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு மகள்களும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. அந்த குடும்பத்தினரின் சுமார் 50 ஆடுகள் […]

Continue Reading

பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்துவரும் நிலையில், இன்றைய அமெரிக்க மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன்படி இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டாலோ அல்லது அமெரிக்க அணி வெற்றி பெற்றாலோ பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும். அத்துடன் இந்த போட்டியில் அமெரிக்க அணி வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Continue Reading

பாகிஸ்தான், ஈரானிய பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த தீர்ப்பை வழங்கினார். கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இலங்கைக் கடற்பரப்பிற்குள் 123 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் […]

Continue Reading

இலங்கையில் மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை!

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இன்றைய தினம் (14) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23, 875 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 191,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 22 கரட் தங்கம் ஒரு கிராமின் […]

Continue Reading