பாடசாலைகளை கால வரையறையின்றி மூட உத்தரவு!

பங்களாதேஷில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பாரபட்சம் உள்ளதாக தெரிவித்து தலைநகர் டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இதனால் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி மாணவர்களைக் கலைத்தனர். இந்த வன்முறையில் […]

Continue Reading

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உள்ளிட்ட மூவர் கைது

இந்தியாவின் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை பெண் மற்றும் இலங்கைக்கு அழைத்து வர உதவிய இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த விஜிதா (45) என்ற பெண் கடந்த 2023 டிசம்பர் மாதம் விமான மூலமாக 6 மாத கால விசாவில் சென்னைக்குச் சென்று பாண்டிச்சேரியில் தங்கி மனநோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், விசா காலம் முடிவடைந்ததால் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் செல்ல […]

Continue Reading

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட் தொற்று!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் குணமடைந்தார். 81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.

Continue Reading

நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் பிணமாக கிடந்த 6 சுற்றுலா பயணிகள்

தாய்லாந்தின் மத்திய பாங்காக்கில் உள்ள பாதும் வான் மாவட்டத்தில் நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகள் 6 பேர் ஒரே அறையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு அறைகளை பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களின் உடல்கள் அனைத்தும் ஒரே அறையில் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் விஷம் குடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பலியானவர்கள் வியட்நாம் வம்சாவளியைச் சேர்ந்தவர். […]

Continue Reading

ஜூலை 21-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நேபாள பிரதமர் சர்மா ஒலி

காத்மண்டு:17 நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றதால், நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் […]

Continue Reading

எக்ஸ் – ஸ்பேஸ் எக்ஸ் தலைமையிடத்தை அதிரடியாக மாற்றும் எலான் மஸ்க் – ஏன் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை […]

Continue Reading

ஓமன் கடற்கரையில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்- 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயம்

கொமொரோஸின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலான ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர், 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேர் மாயமாகினர். இந்த எண்ணெய் கப்பல் டேங்கர் ஏடன் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது. மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் துறைமுகத்திற்கு அருகே கப்பல் கவிழ்ந்தது. எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு […]

Continue Reading

கம்பீர் பரிந்துரைத்த துணை பயிற்சியாளர்களை Reject செய்யும் பிசிசிஐ?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது உதவியாளர்களாக பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை. அவர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய உதவியாளர்களை பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்தார். ஆனால் அவருடைய ஐந்து பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை […]

Continue Reading

டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி- அமெரிக்க உளவுத்துறை தகவல்

வாஷிங்டன்:17 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ந்தேதி பென் சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் டிரம்பின் வலது காதில் தோட்டா உரசி சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில் டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஈரான் […]

Continue Reading

ஓமன் அருகே கவிழ்ந்த எண்ணெய் கப்பல் – மீட்பு பணியில் ஐஎன்எஸ் தேஜ்

ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமானார்கள். எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஓமன் அருகே கொமரோஸ் கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, இந்திய கடற்படையின் […]

Continue Reading

இன்ஸ்டா போஸ்ட் மூலம் விவாகரத்து அறிவித்த துபாய் இளவரசி

துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை வரவேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. விவாகரத்து குறித்து ஷைக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாரகிராம் பக்கத்தில், “அன்புள்ள கணவரே.. உங்களுக்கு வேறொரு துணை கிடைத்துவிட்டதால், நம் விவாகரத்தை […]

Continue Reading

வங்காளதேசத்தில் போராட்டம்: வன்முறையில் 6 மாணவர்கள் பலி

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 […]

Continue Reading