15 வயது சிறுமி துஸ்பிரயோகம்: ஆங்கில பாட ஆசிரியர் கைது

15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு ஆங்கிலம் படிப்பிப்பதற்காக சென்ற போதே, ஆசிரியர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரனை பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading

கருப்பு வெள்ளி கொண்டாட்டத்தில் ஜோ பைடன் வாங்கிய புத்தகம்

அமெரிக்காவில் ஒவ்வொரு வருட நவம்பர் மாத 4-வது வியாழக்கிழமை, “தேங்க்ஸ்கிவிங் டே” (Thanksgiving Day) என கொண்டாடப்படுகிறது. நன்றி தெரிவிக்கும் நாள் என அங்கு கொண்டாடப்படும் இந்நாளில் அமெரிக்காவில் குடும்பங்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் நன்றி கூறி, விருந்துண்டு, விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். இதற்கு அடுத்த நாள் “ப்ளாக் ஃப்ரைடே” (Black Friday) எனப்படும். கருப்பு வெள்ளிக்கிழமை எனும் பெயரில் கொண்டாடப்படும் இந்நாள், டிசம்பர் மாத இறுதியில் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான பொருட்கள் வாங்க தொடங்கும் […]

Continue Reading

காலாவதியாகும் சட்டதிருத்தம் – கடல் போல் குவியும் பாலியல் புகார்கள்

அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான நியூயார்க்கில், கடந்த 2022 நவம்பர் மாதம் பாலியல் தாக்குதல் குறித்த புகாரளிப்பு சட்டங்களில் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் (Kathleen Hochul) சில மாற்றங்களை கொண்டு வந்தார். பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்கள், அது குறித்த புகாரையும், வழக்கையும், 3 வருட காலத்திற்குள் பதிவு செய்து விட வேண்டும் என அங்கு சட்டம் இருந்தது. 2019ல் இந்த காலக்கெடு முறை நீக்கப்பட்டாலும், அது சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தி வந்தது. […]

Continue Reading

இந்த நாடுகளில் இருந்து சீனா செல்ல விசா தேவையில்லை – வெளியான அறிவிப்பு

சீனாவில் இருந்து 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காண வைத்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெற சிறந்த வழி அரசாங்கத்துடன் இணைவதாகும் – ஜனாதிபதி

நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சிகள் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்த வழி எனவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பெறும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் அரசாங்க அதிகாரத்தைப் பெற முயற்சிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மாத்தளை மாவட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளுடன் இன்று (25) பிற்பகல் மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி […]

Continue Reading

செய்தியாளர் சௌமியா கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

15 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் நிகழ்ந்த தொலைக்காட்சி செய்தியாளா் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. டெல்லியில் ஒரு முன்னணி ஆங்கில செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன், 2008-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 30-ஆம் திகதி பணி முடிந்து அதிகாலை 3:30 மணியளவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையின் பின்னணியில் கொள்ளை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனா். இந்த வழக்கில் 15 […]

Continue Reading

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. நாணய மாற்று வீத நகர்வுகளின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜப்பானிய யென்னுக்கு நிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 24.6 சதவீதத்தால் அதிகரித்தது. குறித்த காலப்பகுதியில் ஸ்ரேலிங் பவுண்ட்ஸுக்கு நிகராக 6.2 சதவீதமும், யூரோவுக்கு நிகராக 8 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு நிகராக 11.2 சதவீதமும் இலங்கை ரூபாவின் பெறுமதி […]

Continue Reading

சினோபெக் நிறுவனம் இலங்கையில் தொடங்கவுள்ள புதிய திட்டம்

சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதன்படி இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சினோபெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலீடு 4.5 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் இதற்கான யோசனைக்கு அழைப்பு விடுத்த போது சீனாவின் சினோபெக் நிறுவனமும் மற்றும் Vitol நிறுவனமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை சமர்ப்பித்திருந்தன. ஆனால் […]

Continue Reading

நாட்டில் பதிவுசெய்யப்படாத 18,500 ஆயுர்வேத மருத்துவர்கள் – கணக்காய்வு அறிக்கையில் தகவல்

18 ஆயிரத்து 516 ஆயுர்வேத மருத்துவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறியதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ சபையின் 2022ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆயுர்வேத மருத்துவரும் தனது பதிவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், ஆயுர்வேத மருத்துவ சபை இது தொடர்பான முறையான அமைப்பைக் கண்டறிந்து செயற்படுத்தவில்லை. இதற்கிடையில், ஆயுர்வேத மருத்துவ சபை 2022 ஆம் ஆண்டு […]

Continue Reading

3வது மின்பிறப்பாக்கி விரைவில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் – மின்சார சபை

பராமரிப்பு பணிகளுக்காக செயலிழக்க செய்யப்பட்ட நுரைச்சோலை லக்விஜய அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியை எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இயந்திரக்கோளாறினால் செயலிழக்க செய்யப்பட்ட நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியை அடுத்த மாதம் 16 ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான இயலுமை காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

Continue Reading

இலங்கை கிரிக்கட் நிறுவன ஊழல் தொடர்பான விசாரணைகளிலிருந்து ரஞ்சித் பண்டார நீக்கம்

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் இருந்து கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். கோப் குழுவின் மற்றுமொரு உறுப்பினரின் தலைமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீதான விசாரணைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இந்தியாவின் – திருப்பதி மாவட்டத்தில் வாகன விபத்து: 4 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் – திருப்பதி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து ஒன்றும் மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மகிழுந்தில் திருப்பதியில் இருந்து சென்னை சென்றுள்ளனர். நிகழ்வு முடிவடைந்து அவர்கள் மாலையில் திருப்பதி நோக்கி பயணமாகியுள்ளனர். இதன்போது, குறித்த குடும்பத்தினர் பயணித்த மகிழுந்து, பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் […]

Continue Reading