சீன உணவகத்தில் விற்பனையாகும் தவளைக்கறி பீட்சா

வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோவில் சீன உணவகம் ஒன்றில் வறுத்த தவளை கறியுடன் கூடிய பீட்சா குறித்த காட்சிகள் உள்ளன. அங்குள்ள ஒரு உணவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த பீட்சாவின் நடுவே பொரித்த தவளை உள்ளது. அதில் அவித்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட முட்டை, […]

Continue Reading

Stress- ஐ குறைக்க 1000 வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த திகில் ஆசாமி

ஜப்பானில் சுமார் 1000 வீடுகள் வரை அத்துமீறி நுழைந்த குற்றவாளி ஒருவர் அதற்காகக் கூறியுள்ள காரணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Dazaifu என்ற நகரில் மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர். விசாரணையில் தான் 1000 வீடுகளுக்குக்கள் இதுவரை அத்துமீறிப் புகுந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறு மற்றவர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது தனது மன அழுத்தத்தைக் […]

Continue Reading

வங்காளதேசத்தில் வன்முறை: 3 இந்து கோவில்கள் மீது தாக்குதல்

டாக்கா:27 வங்காளதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது, தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்தது. மேலும் 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. அப்போது அவரை விடுதலை செய்யக் கோரி கோர்ட்டு முன்பு ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, […]

Continue Reading

ஃபெங்கல் புயல் எதிரொலி: புதுச்சேரி கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி […]

Continue Reading

வங்கக் கடலில் இன்று மாலை உருவாகிறது ஃபெங்கல் புயல்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் எதிர்வு கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திருகோணமலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு […]

Continue Reading

கண்காணிப்பு பணியில் விமானப்படை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானப்படை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விமானப்படையின் இல 07ம் படைப்பிரிவை சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் அம்பாறை பகுதிக்கு கண்காணிப்புக்காக புதன்கிழமை (27) அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் போது ஏறாவூர் மைலவட்டவான் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

Continue Reading

லண்டனில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கைப்பை திருட்டு

லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த அலுவலக உதவியாளர் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கனடாவில் கணக்காளராகக் கடமையாற்றும் யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவர் ஆவார். 14 இலட்சத்து 23 ஆயிரம் ரூபா பெறுமதியான 2,700 பவுண் நகைகள் மற்றும் 04 கையடக்கத் தொலைபேசிகள் அடங்கிய கைப்பையே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. […]

Continue Reading

நுவரெலியாவில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று (26) பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை காரணமாக 98 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார். மேலும், வெள்ளம் காரணமாக தடைப்பட்ட கந்தபளை […]

Continue Reading

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்

மல்வத்து ஓயா குளத்தை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. அநுராதபுரம், வவுனியா, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மல்வத்து ஓயா குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பால் அனுராதபுரம் மாவட்டத்தில் மஹாவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவு, வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மூசாலை, மடு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட […]

Continue Reading

சீரற்ற வானிலை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் நேற்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏனைய 3 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Continue Reading

பாகிஸ்தானில் 144 தடை உத்தரவை மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் பேரணி: 4 ஆயிரம் பேர் கைது

இஸ்லாமாபாத்:26 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 72) மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அரசு கருவூலத்துக்குச் சொந்தமான பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். எனவே இஸ்லாமாபாத் கோர்ட்டு அவர்களுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய […]

Continue Reading

கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி: டிரம்ப்

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு டிராம்ப் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் டிரக்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களால் குற்றம் மற்றும் டிரக்ஸ் (போதைப்பொருள்) ஆகியவற்றை கொண்டு வந்துள்ளனர். அதை அனைவரும் […]

Continue Reading