இலங்கை ஆயுதப் படைகளின் திறனை கட்டியெழுப்புவதில் இந்தியா உறுதி – பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் ஆயுதப் படைகளின் திறன் மற்றும் திறனைக் கட்டியெழுப்புவதை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமனே தெரிவித்தார். புதன்கிழமை (07) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்தியா-இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில்” அவர் தனது காணொளி உரையிலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதம், கடற்கொள்ளை, போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு […]

Continue Reading

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் – ஜூ லிசங்

கருத்து வெளி ப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்காவேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூ லிசங் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்து சுதந்திரத்திற்குள்ள உள்ள உரிமையே ஜனநாயகத்திற்கானமுக்கியமான அம்சம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையை மீளகட்டியெழுப்பும் ஸ்திரமானதாக்கும் இந்த அடிப்படை உரி மைபாதுகாக்கப்படுதல் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

தென்கொரியாவில் எஸ்கலேட்டர் பழுதாகி விபத்து – 14 பேர் காயம்

தென்கொரியாவின் தலைநகர் சியோல் அருகே சியோங்னாம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக பலர் சென்றனர். அப்போது அங்குள்ள நகரும் படிக்கட்டை (எஸ்கலேட்டர்) பயன்படுத்தி சிலர் மேலே ஏறி கொண்டிருந்தனர். திடீரென அந்த எஸ்கலேட்டர் கீழ் நோக்கி நகர்ந்தது. இதனால் அதில் சென்றவர்கள் நிலைதடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். உடனடியாக தொழில்நுட்ப குழுவினர் அங்கு வந்து அதனை சரிசெய்தனர். எனினும் இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு […]

Continue Reading

இங்கிலாந்தில் முக்கிய இடங்களில் இருக்கும் சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நடவடிக்கை

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நாட்டில் தயாரான கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் ஆலோசித்து வந்தது. அதன்படி நாட்டின் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் முக்கிய துறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அதேபோல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வினியோகஸ்தர்களை தடை செய்யவும் இந்த மசோதா வழி செய்யும் என […]

Continue Reading

போப் ஆண்டவருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி – சந்திப்புகள் ரத்து

உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86), சமீப காலமாக கடுமையான வலியாலும், குடல் அடைப்புகளாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் 2 தினங்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் குடல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் அவர் அந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ஏற்கனவே முன்பு செய்து கொண்ட அறுவை […]

Continue Reading

27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக அழகிப்போட்டி இந்த ஆண்டு நடக்கிறது

புதுடெல்லி, ஜுன் 09 இந்தியாவில் ‘மிஸ் வேர்ல்ட் ‘ உலக அழகிப் போட்டி கடைசியாக 1996-ம் ஆண்டு நடந்தது. பெங்களூருவில் நடந்த இறுதிப்போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஐரீன் ஸ்கிலிவா பட்டம் வென்றார். அதன்பிறகு இந்தியாவில் இந்த உலக அழகிப்போட்டி நடக்கவே இல்லை. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு உலக அழகிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையொட்டி, ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவரான […]

Continue Reading

பாராளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் பெண்

இத்தாலி பாராளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டியெல்லோ(Gilda Sportiello)அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஜனரஞ்சகமான மூவிமென்டோ 5 ஸ்டெல்லின் உறுப்பினரான ஸ்போர்டியெல்லோ, புதன்கிழமை கீழ் சபையில் பொது நிர்வாக வாக்கெடுப்பின் போது, தன்னுடைய இரண்டு மாத மகன் ஃபெடரிகோவுக்கு(Federico)பாராளுமன்றத்தின் உயர் பெஞ்சில் அமர்ந்திருந்தவாறு தாய்ப்பாலூட்டியுள்ளார். இந்த நிகழ்வு பல நாடுகளில் மிகவும் பொதுவானதாக இருக்கும், ஆனால் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இத்தாலியில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பிரிக்கப்படாத இந்தியா’ சுவரோவியம்

இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ‘பிரிக்கப்படாத இந்தியா’வை சித்தரிக்கும் சுவரோவியம் தொடர்பாக பல்வேறு நாடுகளும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இந்திய தலைநகர் புது டெல்லியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் திறந்து வைத்தார்.. இந்த புதிய கட்டடத்தில் ‘பிரிக்கப்படாத இந்தியாவை’ காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த பிரிக்கப்படாத இந்தியா சுவரோவியம் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வரை […]

Continue Reading

இந்தியாவின் ஜனநாயகம் குறித்து அமெரிக்கா பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் துடிப்புமிக்க ஜனநாயகம் செயல்பட்டு வருகின்றனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் முறைப் பயணமாக இந்த மாத இறுதியில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில் இந்த பயணம் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி தெரிவிக்கையில், இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளது. அங்கு செல்லும் […]

Continue Reading

உளவு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் அமெரிக்கா

விண்வெளியில் ரஷ்யா, சீனாவின் விண்வெளி மையங்களை கண்காணிக்க அமெரிக்கா உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. அமெரிக்க விண்வெளியானது சைலண்ட் பார்கர் எனும் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. இந்த உளவு செயற்கைகோள் சீன அல்லது ரஷ்ய விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதையில் மற்ற செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி வாகனங்களை சேதப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில்விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. பூமியில் இருந்து குறைந்த சுற்றுப்பாதையில் ஜியோசின்க்ரோனஸ் சுற்றுப்பாதையில் இயங்கும் வகையில் இந்த சைலண்ட் பார்கர் பூமிக்கு மேலே 35,400 கிலோமீற்றர் தொலைவில் […]

Continue Reading

உலக பெருங்கடல் தினம்

பூமியின் மொத்த ஓக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது. பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் ஆம் திகதி உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Continue Reading

பிரான்ஸில் சிறுவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்: பலர் படுகாயம்

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்களை மர்மநபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. சிறுவர்களை கத்தியால் குத்திய நபரை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த 6 சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading