பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 9 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் நேற்று தற்கொலைப் படை வீரர் தனது மோட்டார் சைக்கிளை ராணுவ வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்ததில் ஒன்பது வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் போர்க்குணத்தில் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது. எல்லையில் இருந்து 61 கிலோமீட்டர் (38 மைல்) தொலைவில் உள்ள பாக்கிஸ்தானின் பன்னு மாவட்டத்தில் “மோட்டார் […]

Continue Reading

பிலிப்பைன்சில் திடீரென தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி கட்டிடம்: 15 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சின் மணிலாவில் உள்ள இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஆடை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடம் மரப்பலகை மற்றும் கான்கிரீட் கொண்ட கட்டிடம் என்பதால் தீ மளமளவென குடியிருப்பு முழுவதும் பரவியது தீப்பற்றியபோது அந்த கட்டிடத்தில் மொத்தம் 18 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 3 பேர் மட்டுமே வெளியேறி உயிர்தப்பினர். மற்ற 15 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் அந்த […]

Continue Reading

5 விக்கெட்டுக்களால் பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

 ஆசியக் கிண்ணம் 2023 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 05 விக்கெட்டுக்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது. பல்லேகல சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதன்படி அந்த அணி 42.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில், அதிகபடியாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 89 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில், இலங்கை அணியின் மதீஷ பத்திரண 32 […]

Continue Reading

இனி அக்டோபர் “இந்து பாரம்பரிய” மாதமாக கொண்டாடப்படும்: அமெரிக்க மாநிலத்தில் தீர்மானம்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம் அட்லான்டா. இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி இம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து மத விரோத சிந்தனைகளையும், செயல்களையும் கண்டிக்கும் விதமாகவும், “இந்துஃபோபியா” எனப்படும் இந்து மதத்தை குறித்து பொய்யாக அச்சுறுத்தும் வகையில் பரப்பப்படும் பிரசாரத்திற்கு எதிராகவும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே இத்தகைய ஒரு இந்து மதத்திற்கு ஆதரவான கண்டனம் எழுப்பப்படுவது இதுதான் முதல்முறை. அத்தீர்மானம் கொண்டு வந்த போது யோகா, […]

Continue Reading

ஏலத்திற்கு வரும் டயானாவின் கவுன்கள்!

நியூயார்க்,ஆக 31 மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த 3 கவுன்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏலம் விடப்படுகின்றன. அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானா உடுத்திய கவுன்கள் ஏலம் விடப்படவுள்ளன. 1997-ம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தமது 70 கவுன்களை ஏலம் விட்டிருந்தார். அதில் 3 கவுன்களை ஏலம் எடுத்த மிச்சிகனை […]

Continue Reading

ஆசிய கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு!

பல்லகெலே,ஆக 31 இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது இந்த தொடரில் கிரிக்கெட்ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிலையில் இந்த […]

Continue Reading

சிரியாவில் இடம்பெற்ற மோதலில் 18 பேர் சுட்டுக்கொலை

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்ததால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஈராக்கை மையமாக கொண்ட அமெரிக்க இராணுவத்தினர் சிரியாவை பாதுகாத்து வருகிறார்கள்.  இதனால் ஐ.எஸ். இயக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சி இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்கியும், இராணுவ அறிவை பகிர்ந்துகொண்டும் அமெரிக்க இராணுவம் ஆதரவு வழங்கி வருகின்றது. இதில் அமெரிக்க இராணுவத்தின் உதவியை சிரிய ஜனநாயகப்படை இயக்கமும், நாட்டில் உள்ள அரபு பழங்குடியினரும் அதிக அளவில் பெறுகிறார்கள்.  இருவேறு கொள்கைகளை கொண்ட இரு கும்பல்களுக்குள் அவ்வப்போது மோதல் போக்கு […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மும்பை,ஆக 31 இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை முகேஷ் அம்பானியின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பி.சி.சி.ஐ. சார்பில் உள்நாட்டில் நடத்தப்படும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமைத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 963 கோடிகளை […]

Continue Reading

33 வயதில் இரண்டு முறை மாரடைப்பு: பெண் பிட்னஸ் இன்புளூயன்சருக்கு ஏற்பட்ட சோகம்

சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒருசிலரின் வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து, ஒவ்வொரு போஸ்டையும் பார்த்து தங்களது கருத்துகளை வெளியிடுவார்கள். ஆன்மிகம், மருத்துவம், அழகு குறிப்பு, பிட்னஸ் என எல்லா துறைகளிலும் இதுபோன்று வீடியோக்கள் வெளிடுபவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் (Influencer) என அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் பிட்னஸ், பேஷன், டிராவல் குறித்த […]

Continue Reading

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தல்: 16 பேர் கைது

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய இலங்கை பிரஜை ஒருவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர்கள் உள்ளிட்ட 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 228 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா அதிகளவில் கடத்தப்படும் நிலையில், அதனை தடுப்பதற்காக மதுவிலக்கு அமுலாக்க பிரிவினால் தனிப்படை அமைத்து சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. இதற்கமைய, கடந்த 28 ஆம் திகதி மாலை தூத்துக்குடி – […]

Continue Reading

தென் ஆபிரிக்க தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

தென் ஆபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க் பகுதியில் உள்ள கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக ஜொகனஸ்பேர்கின் அவசர முகாமைத்துவ சேவைகள் பிரிவின் பேச்சாளர் ரொபட் முலாவுட்சி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை ஐந்து மாடிக் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

இலவச உணவு திட்டத்தை கொச்சை செய்த பத்திரிகை

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பாடசாலைகளிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் தி.மு.க அரசால் தொடங்கப்பட்டது.  இந்த திட்டத்தால் வேலைக்குச்செல்லும் பெற்றோர் காலை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் சிரமம் குறைக்கப்படும் என்றும், வறுமை காரணமாக பாடசாலைக்கு சாப்பிடாமல் வரும் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் என்று வரவேற்பு கிடைத்தது. வாரத்தில் 5 நாட்கள் வழங்கப்படும் இந்த காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டு சில வாரங்கள் ஆகிறது.  இந்த சூழலில் இன்று பிரபல […]

Continue Reading