மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவேண்டும்: ரஜினிகாந்த்

சென்னை, ஓக 13 நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்திகதி ) முதல் 15-ந்திகதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்திகதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் நேற்று தேசிய கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து […]

Continue Reading

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலீபான் மதகுரு பலி

காபூல், ஓக 13 ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் மூத்த தலீபான் மதகுருவான ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பங்கேற்று உரையாற்றினார். அப்போது தன்னுடைய செயற்கை காலில் வெடிகுண்டுகளை மறைத்து கொண்டு வந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் மதகுரு ஷேக் […]

Continue Reading

கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

ஒட்டாவா, ஓக 13 குரங்கு அம்மை பாதிப்புகள் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்பட்ட நிலையில், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் உள்பட 50க்கும் கூடுதலான நாடுகளில் இந்த பாதிப்புகள் பரவி உள்ளன. அமெரிக்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. சர்வதேச அளவில் 31 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவிலும் பாதிப்புகள் […]

Continue Reading

வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்த வாடிக்கையாளர்

பெய்ரூட், ஓக 13 லெபனான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் பணம் 90 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பிழந்துள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் வங்கிகளில் இருக்கும் தங்களின் வைப்புதொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை மட்டும் எடுக்கும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரு வங்கியில் 2 லட்சத்து 10 ஆயிரம் டாலர்களை வைப்பு தொகையாக வைத்துள்ள இளைஞர் ஒருவர் மருத்துவ செலவுக்காக பணம் […]

Continue Reading

காதலனை வினோத முறையில் தண்டித்த காதலி

மெல்போர்ன், ஓக 13 பழங்காலம் தொட்டு இன்று வரை காதலிலும், காதலிப்பவர்களும் இருந்து வருகின்றனர். எனினும், அவர்களில் ஒருவர் நம்பிக்கை மோசடி செய்யும்போது, மற்றொருவர் புண்படுகிறார். ஆறாத ரணம் தழும்பு ஏற்படுத்தி விடுகிறது. சிலர் அமைதியாகி விடுகின்றனர். ஒரு சிலர் சிறிது காலம் கழித்து, அதில் இருந்து மீண்டு வருகின்றனர். சிலர் பழிவாங்கும் போக்கிலும் ஈடுபடுகின்றனர். ஆனால், காதலில் இருந்த ஆண் ஒருவர் நம்பிக்கை மோசடி செய்தது பற்றி அறிந்த காதலி ஒருவர் தனது காதலனுக்கு வினோத […]

Continue Reading

பலத்த காற்றினால் கட்டிடம் சரிவு: 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஸ்பெயின்,ஓக 13 ஸ்பெயின், Valencia பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்றதனால் இவ்வாறு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அத்துடன் குறித்த கட்டிடத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

ஜோர்ஜியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை

கொழும்பு, ஓக 13 கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பின்னர் ஜோர்ஜியாவில் இருந்து 29 பேர் அடங்கிய முதலாவது சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த குழுவினர் இன்று அதிகாலை 3.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் குறிப்பிட்டார். கடந்த நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்திருந்த போதிலும் மீண்டும் அது வளர்ச்சியடைந்து வருகிறது.

Continue Reading

கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரிப்பு: வார இறுதிவரை ஊரடங்கு

சீனா,ஓக 13 சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றின் வேகத்தினால் சீனாவின் சுற்றுலாத்தளமாக கருதப்படும் Hainanல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, குறித்த ஊரடங்கு உத்தரவானது வார இறுதி வரை நீடிக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Continue Reading

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல்

நியூயார்க், ஓக. 13: பிரபல ஆங்கில மொழி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடி வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சல்மான் ருஷ்டி […]

Continue Reading

எப்.பி.ஐ. அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், ஓக 13 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துசென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்பின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. (மத்திய புலனாய்வு குழு) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தனக்கு தகவல் தெரிவிக்காமலேயே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறி எப்.பி.ஐ. அதிகாரிகளின் சோதனைக்கு டிரம்ப் […]

Continue Reading

சிறுவயதில் பெண்பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கும் நிலை அதிகரிப்பு

கிளிநொச்சி,ஓக 13 கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலைகள் மற்றும் சிறுவயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்நிலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி மனநல நிபுணர்கள் மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கும் விசேட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. குறிப்பாக பாடசாலை படிப்பை முடிக்கும் முன், பெண் பிள்ளைகள் ஆண்களுடன் சேர்ந்து வாழும் போக்கு அதிகமாக […]

Continue Reading