விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி

கொழும்பு,ஆக 30 நமது அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக கால்நடை தீவன இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியால் அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உருவானது. அப்போது முதல், இலங்கை அரசு இந்தியாவில் இருந்து முட்டைகளை நம்பியுள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து 20 லட்சம் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்தது. இந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்கவும் […]

Continue Reading

இணையத்தில் லீக் ஆன ஜெயிலர் “HD ப்ரிண்ட்”- அதிர்ச்சியில் படக்குழு!

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், ஜெயிலர் திரைப்படம் இதுவரை ஒ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை. ஜெயிலர் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் […]

Continue Reading

வானில் அரிய நிகழ்வு – நீல நிறத்தில் காட்சியளித்த சூப்பர் புளூ மூன்

ஒரே மாதத்தில் வழக்கமாக ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை பவுர்ணமி வரும். அந்த வகையில் ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, 2-வதாக தோன்றும் முழு நிலவு புளூ மூன் (நீல நிலவு) என குறிப்பிடுகிறார்கள். நிலவு பூமியை சுற்றி வர ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால் 29.531 நாட்கள் ஆகும். கடந்த […]

Continue Reading

பாபர் அசாம் , இப்திகார் அகமது அதிரடி சதம்: பாகிஸ்தான் 342 ரன்கள் குவிப்பு

கராச்சி,ஆக 30 இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு […]

Continue Reading

நாட்டின் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் – ஐ.நா

வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது என ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. உலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்த ஈவிரக்கமற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் -தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியாத […]

Continue Reading

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து: நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள அரசாங்கம் இணக்கம்

கொழும்பு,ஆக 30 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்புடையதான இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது.      அது தொடர்பான தேவையான அறிவித்தல்களை கப்பலின் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் சட்டத்தரணிகள் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அனுப்புவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்திருக்கும் இடைக்கால நட்டஈட்டு அறிக்கைகளுக்கமைவாக இந்த இடைக்கால நட்டஈடு பெற்றுக்கொள்ளப்பட இருக்கிறது.  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட […]

Continue Reading

சிறை தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ராணுவ தளபதி

தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள நாடு சிலி. 1973 செப்டம்பரில் இங்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கட்சியை சேர்ந்த சால்வடோர் அல்லெண்டே எனும் அதிபரின் ஆட்சியை, அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ.-வின் மறைமுக துணையுடன் ராணுவ கிளர்ச்சி மூலம் அகற்றி விட்டு, ராணுவ தலைவர் அக்ஸ்டோ பினோசெட் ஆட்சியை கைப்பற்றினார். பிறகு பினோசெட் சுமார் 16 ஆண்டுகள் சிலியில் ஆட்சி புரிந்தார். அல்லெண்டேவின் தீவிர ஆதரவாளர் பாடகர் விக்டர் ஜரா. அமைதி வழிகளிலேயே பிரச்சனைகளுக்கு […]

Continue Reading

அமெரிக்காவை நரகத்தை நோக்கி நகர்த்துகிறார் பைடன்: டொனால்ட் டிரம்ப் விமர்சனம்

அமெரிக்காவின் 45-வது அதிபராக 2017-இல் இருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77). அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் சமீப காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார் […]

Continue Reading

இங்கிலாந்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 200 விமானங்கள் ரத்து

இங்கிலாந்து நாட்டின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து சரியாக சிக்னல் கிடைக்காததால் பல விமானங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. இதன் காரணமாக இங்கிலாந்தில் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் தொழில்நுட்ப குழுவினர் பல மணி நேரம் போராடி இதனை சரிசெய்தனர். எனினும் இந்த தொழில்நுட்ப கோளாறால் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்களின் கால அட்டவணை நாள் முழுவதும் மாற்றப்பட்டது. இதன் காரணமாக […]

Continue Reading

தேன் தேடியோருக்கு கிடைத்த தங்க புதையல்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொதலக்கூர் கிராமத்தில் ஒரு வனப்பகுதி உள்ளது. பொதலக்கூர் வனப்பகுதியில் அங்கம்மா கோவிலும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவில் முறையாக பராமரிக்கப்படாமல் பாதி இடிந்த நிலையில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த கோவிலின் இடிபாடுகளுக்கு இடையே தேன் கேசரிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு பழமையான குடம் புதையலாக கிடைத்துள்ளது. அந்த குடத்தில் தங்க காசுகள், தங்க சங்கிலிகள் என ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன. தொடர்ந்து […]

Continue Reading

பூர்வகுடி மக்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்படுமா?: ஆஸ்திரேலியாவில் பொது வாக்கெடுப்பு

அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அந்நாட்டிலேயே காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு அந்நாடுகளில் பிற்காலத்தில் குடியேறி தற்போது வரை குடிமக்களாக வாழும் மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் கிட்டத்தட்ட சரிசமமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் மட்டும், அங்குள்ள 2.5 கோடி (26 மில்லியன்) மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.2% பழங்குடி மக்கள் வசித்து வந்தாலும் அவர்களுக்கு பின் அங்கு குடியேறியவர்களுக்கு உள்ள உரிமைகள் இல்லாததால், பழங்குடியினரின் சமூக, பொருளாதார வாழ்வியல் மிகவும் பின்னடைந்துள்ளது. […]

Continue Reading

மீண்டும் பதற்றம்: உக்ரைன் தலைநகர் மீது ரஷியா குண்டு வீச்சு – 2 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு […]

Continue Reading