இரட்டை வேடங்களில் அருண் விஜய்: ரெட்ட தல ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து […]

Continue Reading

ஆந்திராவில் மண மேடையில் மின்சாரம் தாக்கி பெண் பலி!

ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர். அப்போது பூசாரி வெங்கட்ரமண ரெட்டி ஒலிவாங்கியில் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்தார். […]

Continue Reading

ஐ.பி.எல். 2024 – டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதுவரை சென்னை அணி விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது. லக்னோ அணியும் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது. சென்னை அணி விளையாடிய கடைசி போட்டியில் […]

Continue Reading

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தைவான் தலைநகர் தைபேயில் நேற்றிரவு 11.35 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் தைபே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த 3ஆம் திகதி தைவானின் – ஹூவாலியன் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 மெக்னிடியூட்டாக பதிவானது. இதில் 20க்கும் […]

Continue Reading

வைரலான உயரமான பெண்

தனித்துவமான உடல் அமைப்பை கொண்டவர்கள் மற்றவர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்த வகையில், நடாலியா என்ற 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட பெண் ஒருவர் நெரிசல் மிகுந்த சாலையில் நடந்து சென்ற போது அவரை அங்குள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடாலியா மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள சாலையில் செல்கிறார். அப்போது அவரது எதிர்புறம் வரும் பலரும் […]

Continue Reading

துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தை பிடித்த சமரி அத்தபத்து!

சர்வதேச கிரிக்கெட் சபையின்(ICC)  ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து  773 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சமரி அத்தப்பத்து அண்மையில் இடம்பெற்ற  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இந்தியாவில் திடீரென உடைந்து வீழ்ந்த மேம்பாலம்

இந்தியாவின் – தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளாக இதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வீசிய கடுங் காற்றுக் காரணமாக இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading

மிளகாய் தூள் தூவி மணப்பெண்ணை கடத்த முயற்சி!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடயம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சினேகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் சினேகா திருமணம் நடந்தது. தாலி கட்டிய பிறகு சினேகா மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். வழக்கம்போல திருமண மண்டபத்தில் ஒரு புறம் விருந்து நடந்து கொண்டிருந்தது. […]

Continue Reading

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு நேர்முகப்பரீட்சை!

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைகளை […]

Continue Reading

மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகளுடன் இருவர் கைது

மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஒட்டப்பட்ட போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் பதுளையில் 43 வயதான சந்தேக நபர் ஒருவரும் 22 வயதுடைய சந்தேக நபரும் இன்று (23) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸ் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அகரபத்தனை மற்றும் புடலுஓயா பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், ஆனால் அவர்களின் தேசிய அடையாள அட்டையில் நான்கு பிரதேசங்கள் முகவரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் […]

Continue Reading

சாமரி அத்தபத்துவிற்கு முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார். அவர் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 773 ஆகும்.

Continue Reading

14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு – இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி

14 வயது சிறுமியின் மன மற்றும் உடல் நலனை பாதுகாக்க கருக்கலைப்பு செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலியல் வன்கொடுமையால் கருவுற்றிருக்கும் அவரது கருவுக்கு கிட்டத்தட்ட 30 வாரங்கள் ஆகிறது என்றும், தான் கர்ப்பமாக இருப்பது அவருக்கு தெரியவந்தது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஊடகங்களின்படி, கருக்கலைப்புச் சட்டம் திருமணமான பெண்களுக்கும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள், ஊனமுற்றோர், சிறார் போன்ற சிறப்புப் பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் கருக்கலைப்பு வரம்பு […]

Continue Reading