இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் அதிகரிப்பு!

இந்த ஆண்டு, ஆடை ஏற்றுமதி வருவாய், ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஆரம்ப இலக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத் கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆடை ஏற்றுமதி வருவாய் 2022 ஆம் ஆண்டிற்கு இணையாக இருந்தது. எனினும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஈட்டிய வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அவதானிக்க முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆடை ஏற்றுமதி வருமானம் 299.1 மில்லியன் […]

Continue Reading

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி

இலங்கையின் மின்சாரத் துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 200 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

Continue Reading

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 51 சதம், விற்பனை பெறுமதி 295 ரூபாய் 51 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 57 சதம், விற்பனை பெறுமதி 373 ரூபா 91 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 67 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 49 சதம். சுவிஸ் […]

Continue Reading

குவைட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கான விசேட அறிவிப்பு

குவைட்டில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்களது கைவிரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என அந்தநாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குவைட்டில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உரிய இடங்களில் தங்களின் கைவிரல் அடையாளத்தை வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு […]

Continue Reading

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (25) அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 214,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 197,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 213,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் […]

Continue Reading

பிரதமர் – சர்வதேச CPC திணைக்களத்தின் துணை அமைச்சர் சந்திப்பு!

சீன மத்தியக் குழுவின் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் திணைக்கள துணை அமைச்சர் Sun Haiyan (IDCPC) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பில் மக்கள் சீனக் குடியரசின் CPC சீன மத்தியக் குழுவின் சர்வதேசத் திணைக்கள உயர் அதிகாரிகளும் இலங்கைக்கான சீன தூதுவர் மாண்புமிகு Qi Zhenhong அவர்களும் சீன தூதரகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற குழுக்களின் உப […]

Continue Reading

வடக்கு, கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – ரொஷான்

உலகில் 38 நாடுகளில் விடுதலை புலிகள் அமைப்பு இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். பொலன்னறுவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவு […]

Continue Reading

ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வு!

இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை 1914ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பின்னர் ஏற்பட்ட காலநிலை சீர்கேடு மற்றும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் போன்றவற்றின் காரணமாகக் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து குறித்த பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான இடவசதிகள் தொடர்பில் தமிழக கடல்சார் துறையின் தலைவர் வள்ளலார் […]

Continue Reading

மாலைதீவில் போதைப்பொருட்களுடன் 5 இலங்கையர் கைது

ஐஸ் மற்றும் கொக்கைன் போதைப்பொருட்களை ஏற்றிச்சென்ற இலங்கை இழுவை மீன்பிடி படகொன்று மாலைதீவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது . இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு ஏற்றிச்செல்லப்பட்ட 344 கிலோ ஐஸ் மற்றும் 124 கிலோ கொக்கைன் போதைப்பொருட்களுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலினடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்குமிடைப்பட்டவர்களெனவும் திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த போதைப்பொருட்கள் மாலைதீவுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்டதா அல்லது மாலைத்தீவிலிருந்து வேறு […]

Continue Reading

மீண்டும் சென்னை அணியில் அஸ்வின்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட்டை ரூ..11.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி. கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ​ஜோனி பேர்ஸ்டோவை எந்த அணியும் […]

Continue Reading

மத்தள விமான நிலையத்தின் செலவு வருமானத்தை விட 8 மடங்கு அதிகரிப்பு!

2023ஆம் ஆண்டு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் செலவானது, வருமானத்தை விட எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அதன் இயக்கச் செலவு 2 ஆயிரத்து 412 மில்லியன் ரூபாவாகவும், வருமானம் 288 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 124 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள […]

Continue Reading

அதானி குழுமத்தின் திட்டங்கள் குறித்து இலங்கையின் இறுதிமுடிவு

அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து உலக நாடுகள் அதன் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துவரும் நிலையில் இலங்கை அதானி குழுமத்தின் மீள்சக்தி திட்டங்கள் குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னார் பூநகரியில் அதானி குழுமத்தின் மீள்சக்தி திட்டங்கள் குறித்து ஆராய்ப்படுவதாகவும் எனினும் அவை குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை எனவும் இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் தனுஸ்க பராகிரமசிங்க தெரிவித்துள்ளார். காற்றாலைமின் திட்டம் குறித்த யோசனைகள் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என […]

Continue Reading