நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (05) மோதவுள்ளன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதல்ல துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்று பகல் 2.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது. நடப்பு உலகக் கிண்ண தொடரில் இந்தியா 1 ஆவது இடத்திலும் தென்னாப்பிரிக்கா அணி 2 ஆவது இடத்திலும் உள்ளன. இன்று (05) இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான போட்டி ஈடன் கார்டன்ஸில் நடைபெற இருக்கிறது.

Continue Reading

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று (05) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு நேபாளத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களைக் மீட்பதற்கான தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

காஸாவிலிருந்து நாட்டை வந்தடைந்த 11 இலங்கையர்கள்

காஸாவிலிருந்து 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் இடம்பெற்று வரும் மோதலையடுத்து குறித்த 11 இலங்கையர்களும் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

இந்தியா – தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு பலப்பரீட்சை

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 37 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 02 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 5 முறை மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகளிலும் இந்தியா அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Continue Reading

அசானி மற்றும் கில்மிசாவுக்கு பணப்பரிசில்களை வழங்கினார் தியாகி!

தென்னிந்திய தொலைக்காட்சியான சீ தமிழின் சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்துகொண்டு திறமைகளை வெளிக்காட்டிவரும் அசானி மற்றும் கில்மிசா இருவருக்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா பணப்பரிசில்களை நேரிலே சென்று வழங்கினார். அண்மையில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியிலேயே குறித்த பணத்தொகை இருவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது. அதன்படி இலங்கை ரூபாவின் படி அசானிக்கு 10 இலட்சமும் கில்மிஷாவுக்கு 5 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில போட்டியாளர்களுக்கும் இதன் போது பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. […]

Continue Reading

கைமாறியது விகாரமஹாதேவி பூங்கா

விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

Continue Reading

ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான வரைவு – அலி சப்ரி

இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவிக்கையில், நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிதல்களை ஏற்படுத்தி நீண்டகாலமாக காணப்படுகின்ற முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதில் அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுப்புக்களைச் செய்து வருகின்றது. அந்த வகையில் தான் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்ஊடாக இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டவருதும், பாதிக்கப்பட்டவர்களுக்கான […]

Continue Reading

செவ்விளநீர் ஏற்றுமதி 117% வீதத்தால் அதிகரிப்பு

செவ்விளநீர் ஏற்றுமதி 2023 ஆம் ஆண்டில் 117% வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையாக அன்றி உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தென்னை அபிவிருத்திச் சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை எனும் நிறுவனங்களில் அதிகாரிகளுடன் நாட்டின் தென்னைப் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட […]

Continue Reading

நேபாளத்தில் நில அதிர்வு – இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை

நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என நேபாளத்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. சுமார் 100 இலங்கையர்கள் நேபாளத்தில் வசித்து வருவதாகவும் காத்மண்டு மற்றும் பொக்கராவில் அவர்கள் வசித்து வருவதாகவும் நேபாளத்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் 150க்கும் அதிகமானோர் பலியாகியதுடன், 160க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 6.4 மெக்னிடியூட் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியதுடன், அது இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் […]

Continue Reading

காஸா நிலைமையையும் இலங்கையையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது நியாயமற்றது! ஜனாதிபதி

‘காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என்றும், தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு தூய்மையான கரங்களுடன் வந்தால் மட்டுமே பதிலளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் இலங்கை அதற்கு பதிலளிக்க வேண்டுமா? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். வெலிமடை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு […]

Continue Reading

தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டோம்: பாகிஸ்தான் ராணுவம் தகவல்

இஸ்லாமாபாத்:நவம் .04 பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மியான்வாலியில் அந்நாட்டின் விமான படையின் பயிற்சி தளம் ஒன்று உள்ளது. இன்று காலை பயங்கரவாதிகள் சிலர் திடீரென அந்த தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் உஷாரான ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் இந்த சண்டை நீடித்தது. இதில், 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 விமானங்கள் சேதமடைந்தன. இந்த விமானப்படை தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டோம் என […]

Continue Reading

பாகிஸ்தான்: விமான படை தளம் மீது திடீர் தாக்குதல்-3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

கராச்சி,நவம்.04 பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டின் விமான படை பயிற்சி தளம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று காலை பயங்கரவாதிகள் சிலர் திடீரென அந்த தளத்திற்குள் புகுந்து தாக்க தொடங்கினர். இதனால் உஷாரான ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்ற 3 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். எனினும், பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில், விமான படை பயிற்சி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 விமானங்கள் சேதம் அடைந்தன என அந்நாட்டு […]

Continue Reading