2025 சாம்பியன்ஸ் டிராபி: டேவிட் வார்னருக்கு வாய்ப்பில்லை: ஜார்ஜ் பெய்லி அதிரடி

டேவிட் வார்னர் 3 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருடன் டெஸ்ட்டிலும், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார். இப்படி அறிவித்ததையடுத்து அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான […]

Continue Reading

மூன்று சிறிய படகு மூலம் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி களிர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஏமனில் உள்ள அல் ஹுதைதா கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று சிறிய படகு மூலம் கப்பலை வழிமறித்துள்ளனர். இரண்டு படகில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் […]

Continue Reading

இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு

லாகூர்: 15 சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தியுள்ளார். இது அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும். பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க இருப்பதற்கான காரணங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அட்டாவுல்லா தரார், […]

Continue Reading

பெண்களுக்கு ஆலோசனை வழங்கி ரூ.163 கோடி சம்பாதிக்கும் பிரபலம்

சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், சிலருக்கு பணம் ஈட்டித்தரும் தளமாகவும் விளங்குகிறது. அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஆலோசனைகள் கூறி ஆண்டுக்கு ரூ.163 கோடி சம்பாதிக்கிறார். ஆனால் இவர் கூறும் ஆலோசனைகள் சர்ச்சையாக உள்ளது. அதாவது பணக்கார ஆண்களை திருமணம் செய்வது எப்படி? என்பது குறித்து பெண்களுக்கு இவர் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். க்யூ குவின் என்ற பெயர் கொண்ட இவர், காதல் உறவுகளை கையாள்வது […]

Continue Reading

இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்களை மீளப் பெற நடவடிக்கை

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கதாரா தேவியின் சிலை உட்பட காலனித்துவ காலத்தில் நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட பல தொல்பொருட்களை மீண்டும் இந்நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற கல்வி முறையொன்று எமது நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அதன் ஊடாக நாட்டை நேசிக்கும் பெருமைமிக்க மக்களை உருவாக்க வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் […]

Continue Reading

சோமாலியா தலைநகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 5 பேர் உயிரிழப்பு

யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொது கூட்டம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. பொதுக் கூட்டம் ஜூலை 19 முதல் 22 வரை நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் உள்ள 108 ஐசிசி உறுப்பு நாடுகளில் இருந்து 220 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கிரிக்கெட் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Continue Reading

ருமேனியா,போலந்துக்கு செல்லவுள்ளார் அமைச்சர் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ருமேனியா மற்றும் போலந்திற்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயங்களின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இதேவேளை, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் புதிய இலங்கைத் தூதரகத்தை வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். அங்கு 2023 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தனது தூதரக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

கனடா ஆசை கூறி மோசடி – இருவர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொரளை பிரதேசத்தில் இயங்கும் நிறுவனமொன்று கனடாவில் நிதித்துறையில் தொழில் வழங்குவதாக கூறி 10 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்ட போதிலும் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் பணியகத்தில் செய்த முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்த, சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்போது, குறித்த நிறுவனம் இலங்கை வெளிநாட்டு […]

Continue Reading

காலி சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த கைதி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (13) உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று கைதிகள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (14) மாலை இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், மற்றைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன், வட்டவளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் தனது மனைவி மற்றும் மூன்று பேருடன் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் […]

Continue Reading

நான்காவது முறையாக யூரோ கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்!

ஸ்பெயின்(Spain) மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ண தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கிண்ண கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கமைய, கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமான இந்த தொடரானது, நேற்றுடன்(14) முடிவுக்கு […]

Continue Reading