IPL : கண்கலங்கிய நிலையில் திட்டித் தீர்த்த விராட் கோலி

பந்து வீச்சில் ஆர்சிபி அணியின் 4 பவுலர்கள் அரைசதம் விளாசினர்.அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 68 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.பெங்களூருவில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஹெட், 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று ஹென்ரிச் கிளாசென் […]

Continue Reading

ஐ.பி.எல்; கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா,16 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் […]

Continue Reading

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும காலமானார்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் இன்று காலமானார். பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்த IMF?

நாட்டை தற்போதைய பொருளாதார நிலைமையில் இருந்து முன்னேறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கை அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருக்கும் இடையே நேற்று அமெரிக்காவின் – வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற  விசேட கலந்துரைடலின் போதே அவர் […]

Continue Reading

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கிச் செல்வதற்கு இன்று (16) முறையான ரயில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எவ்வாறாயினும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்வதற்காக நானுஓயா ரயில் நிலையத்தில் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது . பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் தொழில் நிமித்தம் கொழும்பு திரும்பும் பயணிகளின் […]

Continue Reading

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 20 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 79 சதமாக காணப்பட்டது. அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 54 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 […]

Continue Reading

உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ள ஈரான் ஜனாதிபதி

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த பாரிய திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ நேற்றைய தினம் (15) தெரிவித்தார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் […]

Continue Reading

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றிய யாழ்.பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் […]

Continue Reading

இலங்கையில் பயிரிடப்படவுள்ள உலகின் பிரபலமான அன்னாசி

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet pine apple அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி இருந்தாலும், அந்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், குறித்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிடும் பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக […]

Continue Reading

உலகக் கிண்ணத்திற்கான 32 பேர் கொண்ட ஆரம்ப அணி

எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக 32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பை சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார், மேலும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க துணை தலைவராக பணியாற்றுவார். 32 பேர் கொண்ட குழாமில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ச மற்றும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரும் […]

Continue Reading

பாதாள உலகக் குழுத் தலைவரின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல சஞ்சீவ“வின் உதவியாளர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது சந்தேக நபர் ராகமை, கல்வலவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ராகமை, கல்வலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது நபராவார். சந்தேக நபரிடமிருந்து 526 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் […]

Continue Reading

ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட பலர் மாயம்!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கந்தர்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த படகில் சிறார்களும் உள்ளூர்வாசிகளும் கந்தர்பாலிலிருந்து பத்வாரா வரை பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம் உள்ளிட்ட […]

Continue Reading