15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்!

மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (29) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும், சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், அவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையினர், […]

Continue Reading

தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்கு 200 மில்லியன் செலவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சிடல் குறித்த தேவைகளுக்கு சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அச்சு வேலைகளில் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார். வாக்குப்பதிவு தொடர்பான வாக்குச் சீட்டுகளின் முதற்கட்ட அச்சிடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

Continue Reading

இன்று கூடவுள்ள 30 தொழிற்சங்கங்கள்

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று (30) நடைபெறவுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்திற்கு 6% முதல் 36% வரை வரி விதிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை உடனடியாக திரும்பப் பெறக் கோரி கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இச்சந்திப்பில் சுமார் 30 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.

Continue Reading

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் தப்பிக்க இடமளிக்க மாட்டோம்! சஜித்

திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என சிலர் சொல்கிறார்கள் எனவும், அவ்வாறு சொல்லும் தரப்பினர் அதனை எவ்வாறு நிறைவேற்றுவதென சொல்வதில்லை எனவும், இதனை நிறைவேற்றுவதற்கு முறைமையொன்றினை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தீர்வற்ற நாட்டிற்கு தீர்வு எனும் கருப்பொருளில் குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக […]

Continue Reading

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு நன்கொடையாளர்கள் ஆதரவு அளிக்குமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதன் பின்னர் இந்தியாவில் இருந்து வரும் மக்கள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் எதிர்வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நடைபெறும் தேவாலய திருவிழாக்களில் மொத்தம் 8,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் […]

Continue Reading

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்: பழனி திகாம்பரம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்ற எண்ணம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேர்தலுக்கு முழுமையாக தயாராகியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Continue Reading

யாழில் நகை கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது

வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்த கும்பலைச் சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிட்ட நகைகள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கோப்பாய், மூன்று கோயிலுக்கு அண்மையாக கடந்த ஜனவரி 3ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. 5 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை இருத்தி வைத்து மூன்று பெண்களை அடித்துத் […]

Continue Reading

சுயாதீன ஆணைக்குழு தீர்மானம்: அதிகாரிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை அதிகாரிகள் அமுல்படுத்தாமை தொடர்பில் நாளை (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (29) மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அவர், சுயாதீன ஆணைக்குழுவின் பணி சுயாதீனமாக செயற்படுவதே தவிர அரசியல் அதிகாரத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதல்ல என தெரிவித்தார்.

Continue Reading

சாவகச்சேரியில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்  சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

5 மணிநேர விசேட சுற்றிவளைப்பில் 489 பேர் கைது

கொழும்பில் இன்று (29) காலை 6 மணித்தியாலங்கள் கொழும்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அண்மைய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான நடவடிக்கை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்த இந்த நடவடிக்கை சில வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் […]

Continue Reading

மூன்று பிள்ளைகளின் தந்தை ஆற்றில் விழுந்து உயிரிழப்பு

கெசல்கமு ஓயாவில் விழுந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று (29) பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவான தோட்டத்தில் வசிக்கும் பெரியண்ணன் கருப்பையா என்ற 75 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே கெசல்கமு ஓயாவில் இவ்வாறு விழுந்துள்ளார். குறித்த நபர், கிளினிக் அட்டையுடன் காலை வீட்டை விட்டு வெளியேறி, கெசல்கமு ஓயாவுக்குச் செல்லும் குறுகிய வீதியில் நடந்து […]

Continue Reading

வட மாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்

வடமாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வருடம் புதிதாக 100,000 பனை மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.விவசாயிகளுக்கு தேவையான கன்றுகள் மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த நாட்டில் இதுவரை 11 மில்லியன் பனை மரங்கள் நடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார் .

Continue Reading