அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரிப்பு

நான்கு மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விட அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் ஆய்வினூடாக தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரப் போக்கு தொடர்பான விடயத்தில் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை உணர்வதாகவும் இந்த ஆய்வினூடாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விபரங்களாவன : வெரிட்டே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட அரசாங்கம் […]

Continue Reading

கஞ்சிபானியிடம் இருந்து தப்பிக்க பாதாள உலகத்தின் உதவியை நாடும் தொழிலதிபர்கள்?

மாகந்துரே மதூஷிடம் பணத்தை முதலீடு செய்து அவரது மரணத்தின் பின்னர் பணத்தை மறைத்த பல அரசியல்வாதிகள் மற்றும் மதூஷுடன் டீல் செய்த பலர் கஞ்சிபானி இம்ரானைத் தப்பிக்க பல்வேறு பாதாள உலக குழுக்களின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் பரவலாக பேசப்படுகின்றது. பல கோடி ரூபாவை முதலீடு செய்த மாகந்துரே மதூஷிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில் கிளப் வசந்த அத்துருகிரியவில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக டுபாயில் இருந்து கிடைத்த தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மதூஷின் மரணத்திற்குப் […]

Continue Reading

வட்டுக்கோட்டையில் 10 போத்தல் கசிப்புடன் பெண் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் 10 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல் கசிப்பினை பொலிஸார் கைப்பற்றியதுடன், கசிப்பை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த அவ்வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணையும் கைது செய்தனர். கைது […]

Continue Reading

திருடர்களுடன் இணைந்து பதவிகளை ஏற்க விரும்பவில்லை – சஜித்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி தரப்பினரே முன்னெடுத்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக ஜே.வி.பியினர் செயற்பட்டாலும், அந்தத் திருடர்களுடன் இணைந்து பதவிகளை ஏற்றுக் கொள்ளத் தாம் ஒருபோதும் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

13 வயது சிறுமியைத் தாக்கிய சிறிய தாய் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை மஜீமா நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியைத் தாக்கிய அவரது சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியைத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். கைதானவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்குள்ளான சிறுமியின் தாய், அவரது தந்தையை பிரிந்து பணிப் பெண்ணாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த […]

Continue Reading

மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது – ஜி.எல்.பீாிஸ்

அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் ஜி.எல்.பீாிஸ் குற்றம் சுமத்தியுள்ளாா். ஸ்ரீ மகாபோதி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னா் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். நாட்டில் தேர்தலை பிற்போடுவதற்கு வரலாற்றில் எந்தவொரு கட்டத்திலும் இவ்வாறான சூழ்ச்சிகள் இடம்பெற்றதில்லை. தேர்தலை பிற்போடுவதற்கு தற்போதைய ஜனாதிபதி பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார். தேர்தலை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 3 தினங்களில் […]

Continue Reading

முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவர் திடீர் மரணம்! – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை இடம்பெற்றது. பார் வீதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இந்த நபர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, நாவற்குடா பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Continue Reading

இறந்து கரையொதுங்கும் முதலைகளால் துர்நாற்றம் – மக்கள் அசௌகரியம்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் அருகில் அண்மைக்காலமாக பல முதலைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் சிரமத்துடன் பயணம் செய்வதாக தெரியவருகின்றது. மேலும் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30க்கு அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 7 அடி முதல் 8 மற்றும் 9 அடி முதலைகள் தற்போது இறந்த நிலையில் […]

Continue Reading

வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பினருடன் தமிழ் மக்கள் பொதுச் சபை விசேட கலந்துரையாடல்!

தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகள் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனா். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு இச்சந்திப்பு இடம் பெற்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாகவும் வேலை தேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடப்பட்டது. இதேவேளை, தமிழ் மக்கள் பொதுச்சபையின் மாதாந்த கூட்டம் இன்று மட்டக்களப்பில் ஊரணி அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழர் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த 100க்கும் குறையாத […]

Continue Reading

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் முடிவில்லை – சுமந்திரன்

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும், விரைவில் மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது தொடர்பில் எமது கட்சியின் அரசியல் குழு இணைய வழி ஊடாக […]

Continue Reading

1700 ரூபாய் சம்பளம் வழங்குமாறு கோரி நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளை வலியுறுத்தி தலவாக்கலை, நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தாம் கடின உழைப்பை வழங்குகின்றபோதிலும் அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும், இந்நிலைமை தொடரக்கூடாதெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர். அதேவேளை சனிக்கிழமை (13) தலவாக்கலை லோகி தோட்ட […]

Continue Reading

பொது வேட்பாளர் விடயத்தில் சில தமிழ்த் தலைவர்கள் குளிர் காய நினைப்பது வேதனை – திலீபன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்தார். வவுனியா மகாரம்பைகுளத்தில் புனர்மைக்கப்பட்ட வீதி ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”தற்போது ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அதிலும் பொது வேட்பாளர் ரீதியில் இந்த ஜனாதிபதி தேர்தலை குழப்பி சில தமிழ் அரசியல் தலைவர்கள் குளிர் […]

Continue Reading