நாட்டில் கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் வாங்கிய 73 பேர் கைது

கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 73 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தலைமை பொலிஸ் ஆய்வாளர், இரண்டு பொலிஸ் ஆய்வாளர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், எட்டு பொலிஸ் அதிகாரிகள்  மற்றும் ஒன்பது சார்ஜென்ட்கள் உட்பட 21 பொலிஸ் அதிகாரிகள் அடங்குவர். மேலும், 24 பொதுமக்களும், மூன்று கிராம உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் இலஞ்சம் […]

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாள் செயலமர்வு!

பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு இடம்பெறும் இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர்  […]

Continue Reading

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.  நவகமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நவகமுவ – தெடிகமுவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்டவர் தெடிகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவார்.  சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு […]

Continue Reading

தகாத உறவு: கழுத்து வெட்டப்பட்டு ஒருவர் கொலை

கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமுதுருகந்த பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22) கழுத்து வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்  மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்டவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தணமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.   இதனையடுத்து காணாமல் போன நபர் கொஸ்லந்த பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் தலை […]

Continue Reading

பொன்னாலையில் 14 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்றுகாலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவியின் பேர்த்தியார் புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். […]

Continue Reading

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழுள்ள அதிகாரிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சினைகள் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிவர்த்திப்பதற்கான முறைமையைத் தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Continue Reading

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிகள் கைது!

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அந்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் ஒளிப்படத்தை வைத்து, பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்த பொலிஸார், ஒளிப்படத்தைக் காட்டி மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர்.  இதையடுத்து, பொலிஸாரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.  முறைப்பாட்டுக்கு அமைய, […]

Continue Reading

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேச செயலாளர்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continue Reading

பதுளையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு: சந்தேக நபர் கைது

பதுளை, கொஸ்லந்த , அலுத்வெல பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (22) தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 18 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சடலமாக […]

Continue Reading

பதுளை – செங்கலடி பிரதான வீதியை திறக்க நடவடிக்கை

பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் பதுளை – செங்கலடி பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பதுளை – செங்கலடி பிரதான வீதியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் பிரபாத் அபேவர்த்தன தெரிவித்துள்ளார். குறித்த வீதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டாலும் சில தினங்களுக்குத் தொடர்ந்தும் மாலை 6 மணிக்கு மூட நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

IMF பிரதிநிதிகளை சந்தித்தார் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை மீண்டும் சந்தித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (22) கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உயர் மட்டக் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர், துணைப் பிரதானி திருபதி Katsiaryna Svirydzenka, வதிவிடப் பிரதிநிதி திருமதி மார்த்தா வோல்டெமிகல் மற்றும் வதிவிட பொருளாதார நிபுணர் […]

Continue Reading

அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு!

புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று (21) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் […]

Continue Reading