புதிய அரசாங்கத்திற்கு ஜப்பானிய தூதுவர் ஆதரவு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த ஜப்பானிய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை திறம்பட தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை வீண் விரயம், ஊழல், மோசடியற்ற நாட்டை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் புதிய கொள்கைக்கு ஜப்பான் அரசாங்கத்தின் […]

Continue Reading

தொழில் பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற மகிந்த ஜயசிங்க!

தொழில் பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மகிந்த ஜயசிங்க இன்று (22) குறித்த அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன்போது, கருத்து தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, “இந் நாட்டு மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் வளமான நாடு, அழகான வாழ்க்கை, அந்த செயல்முறைக்கு ஏற்றவாறு, தொழில் அமைச்சர், பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவுடன் இணைந்து, அமைச்சின் ஊழியர்களுடன் கைகோர்த்து, தொழிற்சங்கங்களுடன் இணைந்து […]

Continue Reading

சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது!

கம்பஹா, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மினுவாங்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பன்சிலுபுர மற்றும் மடித்தகம ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்சிலுபுர மற்றும் மடித்தகம ஆகிய பகுதிகளில் வசிக்கும் 45 மற்றும் 46 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Continue Reading

மஹா லேவாய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹராமை வீதியில் மஹா லேவாய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது. தொழினுட்ப கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Continue Reading

இவர்களை கண்டால் அறிவிக்கவும்! வவுனியா பொலிஸாரின் அவசர வேண்டுகோள்

வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7 கோடி பெறுமதியான பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவத்துடன் சீதுவ பகுதியைச் சேர்ந்த பிரேசுமனி துஷார இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.டி சமன் ரணசிங்க ஆகிய இருவரும் தொடர்புடையவர்கள் என அடையாளர் காணப்பட்டுள்ளார்கள். குறித்த இருவரும் தற்சமயம் வவுனியா மற்றும் வடமாகண பிரதேசங்களில் நடமாடிவருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய […]

Continue Reading

வட்டுக்கோட்டை விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் மருத்துவமனையில் உயிரிழப்பு – பெண் வைத்தியர் விளக்கமறியலில்!

வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், […]

Continue Reading

யாழில் பெண்ணொருவரிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி பாலியல் கப்பம் மற்றும் 12 இலட்ச ரூபாய் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு , சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவர் தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. படங்களை வைத்து பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட […]

Continue Reading

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் வவுனியாவில் திறப்பு!

தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட தலைமை அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது. வவுனியா கித்துள் வீதியில் இந்த அலுவலகம் இன்று (22) திறந்துவைக்கப்பட்டது. இதில் விருந்தினர்களாக கலந்துகொண்ட கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரால் இந்த அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்திய பிரமாணம் செய்துகொண்ட அவர்களுக்கு வரவேற்பு நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், […]

Continue Reading

பஸ் சாரதி மீது தாக்குதல்

மாத்தறை பிரதேசத்தில் தனியார் பஸ் மற்றும் பஸ்ஸின் சாரதி மீது தாக்குதல் நடத்திய குழுவினர் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பஸ் சாரதி அளுத்கம பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவது , முறைப்பாட்டாளர் பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போது மற்றுமொரு பஸ் சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து […]

Continue Reading

ஊர்காவற்துறையில் கன்றுத்தாச்சி மாட்டினை வெட்டியவர்கள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை பகுதியில் கன்றுத்தாச்சி மாடொன்றினை இறைச்சிக்காக வெட்டியவர்களை ஊரவர்கள் கண்டு மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் தப்பி சென்றுள்ளனர். மாட்டினை வெட்டி சென்றவர்கள் தப்பி சென்ற நிலையில் அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றும், சுமார் 200 கிலோ எடையுடைய மாட்டிறைச்சியும் ஊரவர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஊர்காவற்துறை, சுருவில் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை (22) உயர் ரக கேப்பை இன கன்றுத்தாச்சி பசுமாட்டினை கடத்தி சென்று, ஆட்கள் அற்ற இடத்தில் அதனை வெட்டி, […]

Continue Reading

6 நாட்களாக சிறுமி மாயம் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

அங்கொடை, களனிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளதக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சிறுமி கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் வீதிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என காணாமல் போன சிறுமியின் தாய் முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 077 776 6582 […]

Continue Reading

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 5 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கண்டி பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Continue Reading