கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கெஹலிய ரம்புக்வெல்ல எதேச்சதிகாரமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளார். கெஹலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்லவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமித்ரி ரம்புக்வெல்ல, தனது தந்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் எதேச்சதிகாரமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினால் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

Continue Reading

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு…?

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வேதன அதிகரிப்பிற்காக தற்போது முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

வேலை நிறுத்த போராட்டம்…?

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் டெட் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள், கடந்த காலங்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

பொரளையிலிருந்து மருதானை வரையிலான வீதியில் வாகன நெரிசல்

பொரளையிலிருந்து மருதானை வரையிலான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ஒருவழிப்பாதையில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வாகன நெரிசல்

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பொரளையிலிருந்து மருதானை வரையிலான வீதியில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Continue Reading

ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: 80 வயதானவர் கைது!

ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பு கல்வியை கற்கும் 23 வயதுடைய மாணவி ஒருவருக்குப் பட்டப் படிப்புக்குத் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகக் கூறி தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை தொடரும் இந்த மாணவி , தனது படிப்பிற்குத் தேவையான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்வதற்குத் தனது காதலன் மூலம் பிலியந்தலையிலுள்ள தொழிற்சாலை ஒனறுக்குச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது . இந்த […]

Continue Reading

கஞ்சா விற்பனை செய்த சகோதரர்கள் இருவர் கைது!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா கட்டுமானை மற்றும் கலுகெலே ஆகிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த வாடகை விடுதிகளில் கஞ்சா போதைப்பொருளை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்ட இரு சகோதரர்கள் நுவரெலியா பொலிஸ் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா பொலிஸ் குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று செவ்வாய்க்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த இரண்டு விடுதியிலும் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு விற்பனை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து […]

Continue Reading

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கராவே ஜினரதன தேரர் ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் இன்று (புதன்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் இந்திய மேலாதிக்கம், பொருட்களின் விலையேற்றம், […]

Continue Reading

திடீரென தீப்பிடித்து எரிந்த பயணிகள் பஸ்

குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மாதம்பேயில் இருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதனையடுத்து, குருநாகல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

Continue Reading

நாடளாவிய ரீதியில் கடமையில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களை பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சோதனையின் போது, பண்டிகைக் காலத்திற்காக தயாரிக்கப்பட்ட பல உணவு மாதிரிகள், இரசாயன பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், உணவு உற்பத்தி நிலையங்களில் உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள், மருத்துவ அறிக்கைகளை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் […]

Continue Reading

கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் விசேட அறிவிப்பு!

விவசாய அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது விவசாயிகள் எவருக்கும் இது தொடர்பில் அறிவிக்காத நிலையில் அதில் தவறு இடம்பெற்றுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் விவசாய அமைச்சருடன் மீண்டும் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. விவசாய அமைச்சர் கிளிநொச்சி வந்து சென்று, தமக்கு தெரியாது […]

Continue Reading

உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது!

உலகின் மிகப்பெரியதெனக் கருதப்படும் 26 அடி நீளம் கொண்ட மஅனகோண்டா பாம்பு வேட்டையர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமேசான் காடுகளின் கடந்த பெப்ரவரி மாதம் இந்த மிகப்பெரிய பெண் அனகோண்டா பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த பெண் அனகோண்டா பாம்புக்கு அன்னா ஜூலியா’ என்று பெயரிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வகையான பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாகக் கருதப்படுகின்றன.

Continue Reading