போதைப்பொருள் ஒழிப்பு செயலமர்வில் ஜனாதிபதி

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான செயலமர்வில் உங்களைச் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியும் பொலன்னறுவை ரோயல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் மாணவி வித்தியா கொலையாளிகளுக்கு நீதி மன்றம் தண்டனை வழங்கியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த கொலை நடைபெற்ற தினத்தில் கொலையாளிகள் அனைவரும் போதைப்பொருளைப் […]

Continue Reading

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்காலமில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்காலம் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், வெற்றிப் பெறுவதற்கு தனிமனிதன் அன்றி கட்சியே வலுப்பெற்றிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

35 ஆயிரம் ஏக்கர் காணி விற்பனைக்கு அரசாங்கம் முஸ்தீபு?

அரசாங்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் காணியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 6ஆம் திகதி எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கையர்களை ஒருமிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் – பிரதமர்

70 ஆண்டுகால நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் 60 ஆண்டுகால சுதந்திரத்தையும் அனுபவித்த இலங்கை மக்கள், இலங்கையர்களான ஒருமிக்க முடியாமை குறித்து வருந்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களிடையேயும், கூட்டுணர்வை ஏற்படுத்தி, உண்மையான இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்துதற்கு இலங்கை மக்களுக்கு முடியாமல் போயுள்ளது எனவும், உண்மையான இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்த முடியாமை, 1978ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரத்தின் உச்சக்கட்ட நன்மைகளை அனுபவிக்க விடாமல் செய்ததாகவும் தெரிவித்துள்ள பிரதமர், இந்தத் […]

Continue Reading

வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் பௌத்தத்திற்கு விஷேட இடமில்லை

சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுக்களின் இடைக்கால அறிக்கையில், பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்பட்டுள்ளதென சில தரப்புகள் கூறிவந்தாலும், தற்போது காணப்படும் அரசமைப்பிலும், பௌத்தத்துக்கு விஷேட இடம் வழங்கப்படவில்லையென அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துடன், தற்போதைய அரசமைப்பில் பௌத்த மதம் தொடர்பாகக் காணப்படும் உறுப்புரை 9, சரியான முறையில் விளக்கப்படவில்லை எனவும், அந்த உறுப்புரை, பௌத்த மதத்துக்கு விஷேட […]

Continue Reading

சிறுவர்களுக்கு எதிராக 9,361 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக, கடந்த வருடம் நாடளாவிய ரீதியில், 9,361 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள புள்ளிவிபரமொன்றில், மலையகத்திலுள்ள 07 மாவட்டங்களில், 2,277 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தில் 271, கண்டி மாவட்டத்தில் 407, கேகாலை மாவட்டத்தில் 351, மொனராகலை மாவட்டத்தில் 252, மாத்தளை மாவட்டத்தில் 307, நுவரெலியா மாவட்டத்தில் 211 மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 593 […]

Continue Reading

புதுக்குடியிருப்பில் துப்பாக்கி தயாரித்தவர் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகநபர் வசமிருந்து 10 துப்பாக்கிகள் 2000 ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, இவர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு துப்பாக்கி விற்பனை செய்த ஒருவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Continue Reading

இலங்கையில் 1,333 வெளிநாட்டு அகதிகள்

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பொறுப்பில் அகதிகளாகவும், அரசியல் தஞ்சம் கோருவோராகவும் 1,333 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களே அதிகமென (1037 பேர்) நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளதுடன், அந்த 1,333 பேரில் 728 பேர் அகதிகளாக தங்கியிருப்பதாகவும் ஏனைய 605 பேரும் அரசியல் புகலிடம் கோரி தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பாக ஐ.நா. அகதிகளுக்கான ஆணையம் விசாரணைகளை […]

Continue Reading

திருமலை துறைமுகத்தில் அமெரிக்காவின் யுத்தக் கப்பல்

அமெரிக்காவின் யுத்தக் கப்பலான லிவைஸ் என்ட் க்ளார்க் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 210 மீற்றர் நீளமானதும், 32 மீற்றர் அகலமானதுமான இந்த கப்பல், இரண்டு கெலிஹொப்டர்களையும் கொண்டது. இந்த கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் அங்கு நங்கூரமிட்டிருக்கும் எனவும், தயார்நிலை பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக கப்பல் திருமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதாகவும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

Continue Reading

பாராளுமன்றத்தை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று பிற்பகல் இடம்பெற்ற விஷேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன், பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவியை அதற்காக எதிர்பார்ப்பதாகவும், தனியொருவரிடமுள்ள அதிகாரம் கூட்டாண்மை முறைக்கு வழங்கப்பட […]

Continue Reading

தேங்காய் விற்பனை நிலையங்களில் விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும்

தேங்காய் விற்பனையின் போது விலையினை காட்சிப்படுத்தாத விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தேங்காய் சாகுபடி வாரியம் தெரிவித்துள்ளது. அநேகமான பிரதேசங்களில் இவ்வாறு விலை காட்சிப்படுத்தப்படாமல் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக வாரியத்தின் தலைவர் கபில யகன்தாவல தெரிவித்துள்ளார்.

Continue Reading

நெடுங்கேணி பஸ் நிலையம் தொடர்பில் மக்கள் விசனம்

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக சுமார் 25 மில்லியன் ரூபா செலவில் கடந்த 07 வருடங்களுக்கு முன்னர் பஸ் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்ட போதிலும், குறித்த பஸ் நிலையத்தில் பஸ்கள் தரித்து நிற்பதில்லையென மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பஸ் நிலைய கட்டிடத் தொகுதியில் சுமார் 20 கடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கடையொன்றுக்கு மாதாந்தம் 1750 ரூபாவை பிரதேச சபைக்கு வாடகையாக செலுத்த வேண்டியுள்ள போதிலும், பஸ்கள் வருகை தராதமையினால் தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், […]

Continue Reading