பரீட்சைத் திணைக்களத்தில் மாற்றங்கள்

பரீட்சைகள் திணைக்களத்தில் பல மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், பரீட்சைகள் திணைக்களத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மோசடிகள், ஊழல்கள் திணைக்களத்துக்குள் இடம்பெற இடமளிக்க போவதில்லை எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கை தொடர்பில் நாளை ஐ.நா சபையில் விவாதம்

இலங்கை தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்கள் குறித்த, நாட்டின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கை நாளை ஐக்கிய நாடுகள் சபையில் விமர்சிக்கப்படவுள்ளது. ஜெனிவா நகரில் இது நடைபெறவுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச் சட்டம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நடவடிக்கைகள் போன்ற இலங்கை குறித்த பல விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

சட்டச் சிக்கல்களாலேயே தேர்தல் பிற்போடப்பட்டது

அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றம் சுமத்தியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்திலுள்ள சட்டச் சிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமூக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதற்காகவே வரவு – செலவு திட்டத்தின் ஊடாக […]

Continue Reading

காமினி செனரத்ன என்னைச் சந்திக்கவில்லை – சீறுகிறார் அமைச்சர் சாகல

04 பில்லியன் ரூபா மக்கள் பணத்தை மோசடி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலணியின் பிரதானி காமினி செனரத் தம்மை சந்தித்ததாக வெளியான செய்தி பொய்யானதென சட்டம், சமாதானம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சாகல ரத்நாயக்க, அந்த தகவல் அடிப்படையற்றது எனவும், பொய்யானது மற்றும் வஞ்சனை மிக்கது எனவும் தெரிவித்துள்ளதுடன், அவ்வாறான ஒருவருடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு தமக்கு எந்தவொரு அவசியமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். […]

Continue Reading

நீதிமன்றில் ஆஜராகுமாறு பஷிலுக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த வழக்கு விசரணையினை வேறு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பான இறுதி அறிவிப்பு நாளை (15) அறிவிக்கப்படுமென கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க […]

Continue Reading

87 வர்த்தகர்களுக்கு இறுதி அறிவித்தல்

கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வர்த்தகர்கள் 87 பேருக்கு கரைச்சி பிரதேச சபையால் இன்று இறுதி அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கனகபுரம் வீதியில், வீதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதனை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அகற்ற வேண்டும் எனவும் அறிவிக்கும் கடிதமே, பிரதேச சபையால் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது, 30 மீற்றர் அகலமுடையது. அதன் இரு புறங்களிலுமுள்ள வியாபாரிகள், தங்களின் வியாபார நடவடிக்கைகளை வீதியின் மத்தியிலிருந்து 15 மீற்றருக்கு […]

Continue Reading

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு முஸ்தீபு

வேலையற்ற பட்டதாரிகளுக்குரிய நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால் நாளை மறுதினம் யாழ். மாவட்ட செயலகம் முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், தம்மால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான 143ஆவது நாள் போராட்டத்தில், பட்டதாரிகளை பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளராக இந்த வருடத்துக்குள் நியமிப்பதாக குறிப்பிடப்பட்டமைக்கு அமைவாக, தமது போராட்டம் கைவிடப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நியமனங்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனாலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

மஹிந்தவின் பிரதம அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணியக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். இவர் நிதி மோசடி விசாரணை தொடர்பில் அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

கிளிநொச்சியில் மாவீரர்தின நிகழ்வு ஏற்பாடு தீவிரம்

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கிளிநொச்சியிலுள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியற் கட்சிகளெனப் பலரும் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலத்தில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடாகி இருந்த போதிலும், இந்த முறை இதுவரைக்கும் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் ஏற்பாடுகள் நடைபெற்று […]

Continue Reading

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி விரைவில்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் திகதி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற புதிய உறுப்பினர் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை ஒன்று கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் இடம்பெறும் என்றும்,தேர்தலுக்கான வேட்புமனு கோரலுக்கான வர்த்தமானி இந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

சிவனொளிபாதமலை யாத்திரையில் பிளாஸ்டிக் முற்றாகத் தடை

சிவனொளிபாதமலை யாத்திரையின் போது, பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உக்காத திண்மப் பொருட்களை கொண்டுசெல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலையின் யாத்திரைக் காலம் ஆரம்பமாகின்ற போது, பொலித்தீன் பொருட்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை கட்டாயமாக கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட சிரேஷ்ட பொது சுகாதார ஆய்வாளர் காமினி பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக பொலிசாரின் துணையுடன், மஸ்கெலியாவில் இருந்து நல்லதண்ணி சிவனொளிபாதமலைக்கான பாதை வரையில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

சுகாதார மத்திய நிலையங்களை அமைக்க கனடா உதவி

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுகாதார மத்திய நிலையங்களை அமைக்கும் வேலைத் திட்டமொன்று கனடா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இரத்தினபுரி, எலபாத்த, பலாவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சுகாதார மத்திய நிலையம் நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனடா அரசின் 10 இலட்சம் ரூபா நிதி உதவியின் கீழ் குறித்த நடமாடும் சுகாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சுகாதார மத்திய நிலையத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், […]

Continue Reading