பிணைமுறி மோசடி வழக்கின் நீதிபதிகளின் பாதுகாப்பு அனுமதி தொடர்பில் பதில் இல்லை – இசுறு தேவப்பிரிய

பிணைமுறி மோசடி வழக்கில் முன்னிலையாகும் நீதிபதிகள் மற்றும் சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ள போதிலும் உரிய பதில் கிடைக்காமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடி வழக்கில் முன்னிலையாகும் நீதிபதிகள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இது விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமையால் சாட்சியாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். பிணைமுறி மோசடி தொடர்பாக […]

Continue Reading

பொதுமக்களின் எதிர்பார்ப்பை செயற்படுத்தாத அலரி மாளிகை – அனுரகுமார

பொதுமக்களின் எதிர்பார்ப்பையும் மீறி அலரிமாளிகையில் பாரிய மோசடிக்காகத் திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். இன்று காலை கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு திருடன் கைது செய்யப்பட்டால், மேலும் திருடர்கள் வெளியில் இருப்பதாக இன்னொரு திருடனுக்குக்கூற முடியாதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மோசடிக்காரர்கள் […]

Continue Reading

ஆசிரியர் சமூகத்தினாலேயே கல்வியியலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் – கஜதீபன்

அர்ப்பணிப்புமிக்க ஆசிரிய சமூகம் நினைத்தால் எவ்வாறான கல்வியியல் மாற்றங்களையும் ஏற்படுத்திட முடியுமென க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தின் சாதனை தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று வெளியான 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. பரீட்சையில் தோற்றிய 23 பேரில் அனைவருமே கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளனர். குறிப்பாக 18 மாணவர்கள் கணித பாடத்தில் ஏ தரச் சித்தியும், இரு […]

Continue Reading

யாழ். பல்கலை மாணவர்கள் சிலருக்கு வகுப்புத்தடை

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்றதான அசம்பாவிதங்கள் தொடர்பில் கலைப்பீடத்தின் 13 மாணவர்களிற்கு வகுப்புத் தடை பிரயோகிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 18ம் திகதி இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகளின்போது சில மாணவர்களினால் பல்கலைக் கழக கட்டிடத்தின் கண்ணாடிகள் பல அடித்து நொறுக்கப்பட்டதான குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வரவேற்பு நிகழ்விற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தடையினை மீறி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை அடுத்து கலைப்பீடம் தற்காலிகமாக […]

Continue Reading

வெளியானது சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள்

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டிருந்தது. இதில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஆறு பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்களும் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தையும், தமிழ்மொழி மூலம் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் பரீட்சை திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார, பரீட்சை மீள்திருத்தங்களுக்காக விண்ணப்பங்களை ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும், கொழும்பு பிரதேச பாடசாலைகளின் பரீட்சை […]

Continue Reading

கைநழுவவிட்ட நிதியின் செயற்திட்டங்களுக்கு பங்குதாரராக முயற்சிக்கு முதலமைச்சர்

வடக்கு மாகாணத்திற்கென வந்த நிதியை கைநழுவ விட்டுவிட்டு எம்மையும் அதில் பங்குதாரராக இணைக்குமாறு கெஞ்சிக் கோரும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். வடமாகாணத்திற்கென வந்த நிதியே முதலமைச்சர் கைநழுவ விட்டதால் குறித்த நிதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரிடம் சென்றது. அவ்வாறு சென்ற நிதியில் வடக்கில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்திட்டத்தில் எமது ஆலோசனைகளையும் பெற்று எம்மையும் பங்குதாரர்களாக இணையுங்கள் எனக் கேட்கும் நிலைமையில் எமது முதலமைச்சர் உள்ளர் என்பது வேதனைக்குரிய […]

Continue Reading

முள்ளிக்குளம் மக்களும் தொடர் போராட்டம்

மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக்கோரி, மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கின்றது. கடற்படையினர், முகாமை விட்டு வெளியில் வந்து மக்களைத் தொடர்ச்சியாகப் புகைப்படமெடுத்து, அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற, மக்கள் தெரிவிக்கின்றனர். கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு கடற்படை முகாமாக மாற்றப்பட்டுள்ள தமது நிலத்தை மீட்டு, மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, முள்ளிக்குளம் கிராம மக்கள் நேற்று முன்தினம் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், அமைதியான முறையில் […]

Continue Reading

அரச திணைக்களங்களை விடுவிக்கக் கோரி பாரிய போராட்டத்திற்கு முஸ்தீபு!

அரச திணைக்களங்களை அபகரித்துள்ள இராணுவம் அவற்றினை விடுவித்து விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உதவ முன்வர வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்புபட்ட அரச திணைக்களங்கள் மற்றும் இதர காணிகளில் மட்டும் 04 முக்கிய இடங்களை இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளனர். இவ்வாறு ஆக்கிரமித்துள்ள இராணுவம் யுத்தம் முடிந்து 08 ஆண்டுகளாகின்ற போதும் அவற்றினை விடுவிப்பதற்கான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதனால் எமது விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, படையினரின் […]

Continue Reading

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விவசாயி – சாவகச்சேரியில் சம்பவம்

சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் கத்தரிக்காய் கொண்டுவந்த விவசாயியை மோட்டார் சைக்கிளில் துரத்திவந்த முகமூடி மனிதர்கள் சாலையில் வைத்து தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை சாவகச்சேரி தனங்கிளப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது. முழங்காவிலைச் சேர்ந்த விவசாயி தினமும் தனது தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காயை சாவகச்சேரி சந்தைக்குக் கொண்டுவந்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலையும் மோட்டார் சைக்கிளில் கத்தரிக்காய் மூடைகளுடன் சந்தைக்கு சென்றுள்ளார். இதன்போது, குறித்த விவசாயியை துரத்திவந்த முகமூடி அணிந்த இருவரும் கொட்டனால் அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். […]

Continue Reading