மருத்துவத் துறை மாணவன் நீரில் மூழ்கி பரிதாப மரணம்

அம்பாறை மாவட்டம் பொத்துவில், லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றில் நீராடிய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காரைதீவைச் சேர்ந்த 20 வயதுடைய சிவகரன் அக்சயன் என்ற மாணவனே இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் இவரும் ஒருவராவார். அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு […]

Continue Reading

யாழில் வர்த்தகருக்கு தண்டம் விதிப்பு!

முறையான அனுமதியின்றி உணவுப் பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து, யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வந்த நபர் ஒருவருக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை […]

Continue Reading

ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழப்பு

நாட்டில் மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் முரண்பாடுகளினால் கடந்த ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. அதில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 28 யானைகளும், மின்சாரம் தாக்கி 21 யானைகளும், ஹக்க பட்டாசுகளினால் 13 யானைகளும், உடம்பில் நஞ்சேற்றம் இடம்பெற்றதால் 2 யானைகளும், ரயில் விபத்தால் 3 யானைகளும், வீதி விபத்தினால் ஒரு யானையும், நீரில் அடித்துச் சென்று 7 யானைகளும், ஏனைய விபத்துக்களால் 4 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த […]

Continue Reading

தம்மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! குணதிலக்க

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டு 11 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இம்மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது. தம்மால் இன்னும் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Continue Reading

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பலி

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் (13) இரவு 7 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மன்னார் – முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயி தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார். இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த […]

Continue Reading

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் – நகை மற்றும் பணம் திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் (13) மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டுக் கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டிலிருந்த […]

Continue Reading

போதைப்பொருட்களுடன் 750 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை  (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 10 பெண்களும் 740 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் 19 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  மேலும், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 274 கிராம் ஹெரோயின்,  170 கிராம் ஐஸ், 200 கிராம் கஞ்சா உள்ளிட்ட […]

Continue Reading

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் நலத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும்  மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் சாதக பாதகங்கள் மற்றும் அதன்  முன்னேற்றங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினார்.

Continue Reading

பொரலந்தவில் கால்வாய் ஒன்றிற்கு அருகில் சிசுவின் சடலம் மீட்பு!

நுவரெலியா பொரலந்தவில் கால்வாய் ஒன்றிற்கு அருகில் இன்று (13) சிசு ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சில நாட்களுக்கு முன்னர் பிறந்த சிசு எனவும், இடுப்பில் இருந்து கீழ் பகுதி இல்லாத நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, உயிரிழந்த சிசுவின் பெற்றோரை தேடும் நடவடிக்கைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். நுவரெலியா பதில் நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சிசுவின் […]

Continue Reading

நான் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றேன்: சஜித்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை. அவரோடு இணையப் போவதும். இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (13) நடத்திய ஊடக சந்திப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நீங்களும் இணைந்து கொள்ள போவதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் […]

Continue Reading

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி சென்ற கொள்ளையர்

கெஸ்பேவ, பண்டாரகமை பிரதேசத்திலுள்ள பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு முன்பாக கடந் த 10 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் பெண்ணொருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த பெண் பல்பொருள் விற்பனை நிலையத்திற்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்கு முச்சக்கரவண்டி ஒன்றுக்காக வீதியில் காத்திருந்த போதே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.   கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலியின் பெறுமதி 5 இலட்சம் ரூபா என […]

Continue Reading

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி நில்மினி கைது

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த நில்மினி என்ற பெண்ணை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கதிர்காமம், கோதமிகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 1,689,000 ரூபா பணத்தைப் பெற்று, வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை பணியகத்திற்கு அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர் பணியக சட்டத்தை […]

Continue Reading