நான் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றேன்: சஜித்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை. அவரோடு இணையப் போவதும். இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (13) நடத்திய ஊடக சந்திப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நீங்களும் இணைந்து கொள்ள போவதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் […]

Continue Reading

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி சென்ற கொள்ளையர்

கெஸ்பேவ, பண்டாரகமை பிரதேசத்திலுள்ள பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு முன்பாக கடந் த 10 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் பெண்ணொருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த பெண் பல்பொருள் விற்பனை நிலையத்திற்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்கு முச்சக்கரவண்டி ஒன்றுக்காக வீதியில் காத்திருந்த போதே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.   கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலியின் பெறுமதி 5 இலட்சம் ரூபா என […]

Continue Reading

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி நில்மினி கைது

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த நில்மினி என்ற பெண்ணை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கதிர்காமம், கோதமிகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 1,689,000 ரூபா பணத்தைப் பெற்று, வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை பணியகத்திற்கு அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர் பணியக சட்டத்தை […]

Continue Reading

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு!

இன்று வியாழக்கிழமை (13) மற்றுமொரு ரயில் தடம்புரண்டுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இன்றையதினம் மாலை தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் தாமதமாகும் எனவும், ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வர தண்டவாளங்களை சரி செய்ய இன்னும் பல மணி நேரம் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் காலை பாணந்துறையில் ரயில் […]

Continue Reading

தம்புள்ளையில் பஸ் மீது கார் மோதி விபத்து

தம்புள்ளை – கொழும்பு வீதியில் பொஹொரன்வெவ பிரதேசத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (13) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரின் முற்பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளது.

Continue Reading

ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: நான்கு பொலிஸ் குழுக்கள் களத்தில்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்பின் பிரகாரம் வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்குகின்ற நான்கு பொலிஸ் குழுக்கள் விசேடமாக அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்று அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு […]

Continue Reading

மீண்டும் மழை…?

(வெள்ளிக்கிழமை) நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று […]

Continue Reading

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என நம்ப முடியாது: முன்னாள் பொலிஸ் மா அதிபர்

கடந்த காலங்களில் வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல் குழுக்கள் மீண்டும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என நம்ப முடியாது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு  கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (13) காலை புறக்கோட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு […]

Continue Reading

பணிப்பகிஷ்கரிப்பில் நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள்!

தபால் ஊழியர்கள் இன்று (13) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு ஆதரவாக நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களை ​சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையத்தில் கடிதங்கள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது ஏனைய சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றது . கடிதம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளமையால் அதிகமான […]

Continue Reading

ஹோட்டலொன்றின் பின்புறத்திலுள்ள கடற்கரையிலிருந்து சடலம் மீட்பு

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குப் பின்புறத்தில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் 70 வயதுடையவர் எனவும் இவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் இறுதியாகக் கபில நிற சட்டையை அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

தம்புகலவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

சுமார் 7 கோடி ரூபா முறைகேடு தொடர்பாக சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள விரஞ்சித் தம்புகலவிடம் எதிர்வரும் 18 ஆம் திகதி இரகசிய வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா பதிராஜா முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை. இதன்படி, நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்க விரும்புவதாக சந்தேகநபர் விடுத்துள்ள கோரிக்கையை அடுத்த […]

Continue Reading

கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் : குழப்பத்தில் யாத்திரிகர்கள்!

கதிர்காமம் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆலயம் நோக்கிய பாத யாத்திரையினை மக்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் 30ஆம் திகதி லாகுகல பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள உகந்தை காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு, ஜூலை 11ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) உகந்தை முருகன் ஆலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, கதிர்காமம் ஆலயத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் […]

Continue Reading