மிஹிந்தலை தேரரின் முறைப்பாட்டுக்கு பொலிஸ் மா அதிபரிடமிருந்து உத்தரவு

மிஹிந்தலை விகாரை பொசன் பண்டிகைக்கு தயாராகி வரும் வேளையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பில் முறையான விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளார். மிஹிந்தலை விகாரையின் தலைவர் கலாநிதி வளவ ஹங்குனவெவே தம்மரதன தேரர் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் பொசன் பண்டிகைக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். […]

Continue Reading

பதுளை ஹாலி எல வனப்பகுதியில் தீவிபத்து!

பதுளை ஹாலி எல வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை ஹாலி எல வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீவிபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் திட்டமிட்ட முறையில் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Continue Reading

சந்தர்ப்பவாதி அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – இராஜாங்க அமைச்சர் ஷாந்த

”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பவாதி அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது தொடர்பாக மக்கள் இருமுறை சிந்திப்பார்கள். கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினரின் செயற்பாடுகளை மக்கள் மறக்கவில்லை. கடந்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கியிருந்த நெருக்கடிகளை சாதகமாக பயன்படுத்தியே வாக்கு எண்ணிக்கையை பெறுவதற்கு […]

Continue Reading

மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட மூவர் கைது

நுவரெலியா, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களாவர். சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை […]

Continue Reading

கம்பஹாவில் போலி நாணயத்தாள், ஆவணங்களுடன் நபரொருவர் கைது

கம்பஹா, ஜா – எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள் மற்றும் போலி ஆவணங்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா, ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5,000 ரூபா போலி நாணயத்தாள், 11 இறப்பர் முத்திரைகள் , போலி தேசிய […]

Continue Reading

விக்னேஸ்வரனை சந்தித்த சஜித்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நல்லூர் கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாச அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் சந்திப்புக்களிலும் பங்குபற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

வயலிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

பொலன்னறுவை, வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருளுபெத்த பகுதியில் உள்ள வயலொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று (12) மீட்கப்பட்டுள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் வெலிகந்தை, நவமஹசென்புர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவராவார். சடலம் வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

வடமராட்சி பகுதியில் 135 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று வியாழக்கிழமை (13) அதிகாலை 4:45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்ச கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து தாளையடி பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர். அவ்வேளை கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அங்கு காணப்பட்ட 135 கிலோ கிராம் எடையுள்ள 03 கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றிய வெற்றிலைக்கேணி […]

Continue Reading

கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட்டம்

கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (13) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு அம்பாறை கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் முரண்பாடு […]

Continue Reading

வெள்ளவத்தையில் விபத்து; ஒருவர் பலி

கொழும்பு,வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (12) புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

Continue Reading

பதுளை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு

பதுளை தல்தென திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் மரணித்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்குளி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த, கைதி ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் கடந்த மார்ச் மாதம் 01 ஆம் திகதி தல்தென திறந்தவெளி சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டு எதிர்வரும் 2024.07.11 திகதி விடுதலை பெற இருந்த நிலையிலேயே திடீர் சுகயீனமுற்ற நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் […]

Continue Reading

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்று அதிகாலை(13) 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, தாக்குதலை மேற்கொண்டுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , […]

Continue Reading