கொழும்பு – கண்டி வீதியில் விபத்து; இளைஞன் பலி

கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – கண்டி வீதியில் சியம்பலாபிட்டிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரின் சாரதியும் முன்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் காயமடைந்துள்ள நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காரின் சாரதி […]

Continue Reading

விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

எம்பிலிப்பிட்டிய – மொரகெட்டிய வீதியில் மொரகெட்டிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளது. கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காரின் சாரதி சந்தேகத்தின் […]

Continue Reading

வெள்ளக்காடாக மாறிய யாழ். நல்லூர்!

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகம், வர்த்தக நிறுவனங்கள்… என அனைத்திலும் நீர் உட்புகுந்து அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

Continue Reading

விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து உரிமையாளரை தாக்கிய இருவர் கைது

களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். முல்லேரியா பிரதேசத்தில் வசிக்கும் 24 மற்றும் 20 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, களுத்துறை, பேருவளை பிரதேசத்திற்குக் கடந்த 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் விற்பனை நிலையம் ஒன்றிற்குள் அத்துமீறி […]

Continue Reading

பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் மீட்பு!

பதுளை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள சிறிய கால்வாயில் இருந்து இன்று புதன்கிழமை (27) காலை பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் பதுளை நகரத்தில் வசிக்கும் 55 வயதுடைய பெண்ணொருவர் ஆவார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

களுத்துறை பிரதேசத்தில் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை , வெனிவெல்கெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜயகொடி ஆராச்சிலாகே சுகத் என்ற நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் வட்டக்கச்சி பெரியகுளம் பகுதிகளில் வீதிகளை மூடியவாறு வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

Continue Reading

பாம்பு கடித்து இளைஞன் மரணம்!

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று (27) காலை பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய 1 பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே பாம்பு கடிக்கு உள்ளாகிய நிலையில், நெடுங்கணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்துள்ளர். தற்போது சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அடுத்து பாம்பு மற்றும் விச பூச்சிகள் நீரில் அகப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் வாய்ப்பு […]

Continue Reading

குளவி கொட்டுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில்

களுத்துறை பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 10 பேர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். களுத்துறை பிரதேசத்தில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த […]

Continue Reading

கடும் கொந்தளிப்பில் முல்லைத்தீவு கடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடல் என்றுமில்லாதவாறு கொந்தளிப்பு நிலைமையுடன் காணப்படுகிறது. தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிழக்கில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி வடக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாெக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு கடல்பரப்புகள் என்றுமில்லாதவாறு கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் தாெழிலுக்கு செல்லாமல் பாதுகாப்பான இடங்களை […]

Continue Reading

காரைத்தீவு பகுதியில் நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் – 7 பேரை காணவில்லை

காரைத்தீவு பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் ​போயுள்ளனர். மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பின்னர், நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு, ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என […]

Continue Reading

150 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது

பாதுக்க, வட்டரெக்க பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 150 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொறள்ளை மற்றும் தலவத்துகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 41 மற்றும் 37 வயதுடையவர்கள் ஆவர்.   சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 42 கிலோ 890 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றையவரிடமிருந்து 29 கிலோ 750 […]

Continue Reading