தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்

அடுத்த சில மணித்தியாலங்களில் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தெதுரு ஓயா பள்ளத்தாக்கில் பராமரிக்கப்படும் ஆற்று நீரின் அளவீடுகளை ஆய்வு செய்ததன் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் […]

Continue Reading

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படலாம்: வெள்ள முன்னெச்சரிக்கை !

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று செவ்வாய்க்கிழமை (26)  திறக்கப்படலாம் என வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இன்று (26) பகல் வரை 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 27 அடியை அண்மித்துள்ளது. இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு  தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்பாசன குளங்கள் நிறைந்து வருகின்றதுடன்,  பிரமந்தனாறு […]

Continue Reading

அந்தமான் நிகோபார் அருகே 5,500 கிலோ போதைப்பொருள் மீட்பு

அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே கடந்த சனிக்கிழமை இந்திய கடலோரக் காவல் படை நடத்திய சோதனையில் சுமாா் 5,5 தொன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையில், மியான்மரைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக இந்திய பாதுகாப்புப் படையினா் தெரிவித்ததாவது, அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே வழக்கமான ரோந்துப் பணியில் கடலோரக் காவல் படை விமானம் ஈடுபட்டிருந்தது. அப்போது, போா்ட் பிளேரில் இருந்து 150 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே […]

Continue Reading

பாதுக்க பகுதியில் 86 கிலோ போதைப்பொருள் மீட்பு

பாதுக்க-வட்டரெக்க பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒரு தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57 கிலோ ஐஸ் போதைப்பொருளும் 29 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை மற்றும் தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 37 வயதுடைய இரு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

தபால் ரயில் இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை தபால் ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட இருந்தது. இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை உடனான காலநிலை காரணமாக மலையகப் பாதையில் இயங்கும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த பஸ் விபத்து; பெண் உயிரிழப்பு

புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடும் மழை பெய்துவரும் இந்நாட்களில் சாலை வழுக்கும் நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் இதய நோயாளி என்றும், பஸ் கவிழ்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் பஸ் சாரதி தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் […]

Continue Reading

கார் – உழவு இயந்திரம் மோதி விபத்து

புத்தளம், சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading

மனைவியின் கை விரல்களை வெட்டி சித்திரவதை செய்த கணவன்

தனது மனைவியின் கை விரல்களை வெட்டியெடுத்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் கணவன் நேற்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய மனைவியே காயமடைந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கோபமடைந்த கணவன் தனது மனைவியின் கை விரல்களை வெட்டி எடுத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மனைவி மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை […]

Continue Reading

நீர்த்தேக்கத்திலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு

நுவரெலியா, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லொய்னொன் தோட்டப் பகுதியில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) பிற்பகல் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவை, லொய்னொன் தோட்டப் பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஆவார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது திக்ஓயா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு […]

Continue Reading

பொலன்னறுவை துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிஜ்ரா மாவத்தை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (25) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவை , கத்துருவெல பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டுத் […]

Continue Reading

மட்டக்களப்பில் மினி சூறாவளி – வீடுகள் சேதம்

மட்டு.வாகரை பிரதேச சபைக்குட்பட்ட மாங்கனி பகுதியில் நேற்றிரவு (25) மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த மினி சூறாவளியில் அப்பகுதியிலுள்ள “லிவிங் கிறிஸ்டியன் அசம்பிலி“ எனப்படும் தேவாலயம் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இவ்வனர்த்தத்தில் 7 வீடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் கடற்கரையில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு படகுகள் கரைக்கு அப்பால் தூக்கியெறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

கொழும்பில் 17 வயது இளைஞன் கொலை!

கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (25) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெஹரகொடெல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரு தரப்பினருக்கு இடையே நிலவிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த நபர் வீட்டில் இருந்த போது கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், உயிரிழந்தவர்களுடன் இருந்த குழுவினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில் […]

Continue Reading