எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகள் முற்றாக நிராகரிக்கப்படலாம் – சிவில் சமூக பிரதிகள்

பொதுமக்கள் தற்போதைய ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதால் பொருத்தமான உரிய வேட்பாளர்களை நிறுத்தாவிட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகள் முற்றாக நிராகரிக்கப்படலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழவில் சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து பொருத்தமான வேட்பாளரை பொதுமக்கள் தெரிவு செய்வதற்கான 10 அம்ச அளவுகோல்களை மக்களிற்கு அறிமுகப்படுத்தியுள்ளன. சுத்தமான கரங்களை கொண்ட ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் […]

Continue Reading

விமான நிலையத்தில் சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய தினம் அதிகாலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 14,800 சிகரட்டுகள் அடங்கிய […]

Continue Reading

நுவரெலியாவில் விபச்சார விடுதி; 6 பேர் கைது

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலன்னாவை, ஹசலக்க, கடவத்தை, வெலிமடை , ஹோமாகம மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 முதல் 47 […]

Continue Reading

ஹிக்கடுவை கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பிரஜைகள்

ஹிக்கடுவை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய அமெரிக்கப் பிரஜையும் 30 வயதுடைய சுவிஸ்டர்லாந்து பிரஜையுமே காப்பாற்றப்பட்டுள்ளனர். காப்பாற்றப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Continue Reading

இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வீடு அன்பளிப்பு!

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று புதன்கிழமை (09) கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவின் ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி […]

Continue Reading

கொழும்பில் பெண் கொலை; சந்தேக நபர் கைது

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிக்கல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது. காலி பிரதேசத்தைச் சேர்ந்த 34 […]

Continue Reading

கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

எல்பிட்டியில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவன் நேற்று (08) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். வெய்ஹேன மத்தக பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கடந்த 7 ஆம் திகதி எல்பிட்டி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக எல்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்; பாடசாலை ஆசிரியர் கைது

11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான பாடசாலை ஆசிரியர் கடந்த 2 ஆம் திகதி அன்று பாடசாலை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதன்போது, சந்தேக நபரான பாடசாலை ஆசிரியர் தனது பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி […]

Continue Reading

தாமரை கோபுரத்தில் மாணவி உயிர் மாய்ப்பு – 5 பேரிடம் சாட்சியங்கள் பதிவு!

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் இதுவரை 5 பேரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த மாணவியின் பிரேதப் பரிசோதனை நேற்று நடத்தப்பட்டதுடன், பலத்த காயங்கள் காரணமாகக் குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக அதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் பாடசாலை சீருடையுடன் தாமரை கோபுரத்துக்கு வருகைதந்த குறித்த மாணவி குறுகிய காலத்தில் பல தடவைகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக விசாரணையில் […]

Continue Reading

சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்திய தனியன் யானை

தனியன் யானை ஒன்று திடீரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை சேதப்படுத்தியுள்ளது. இன்று புதன்கிழமை (09) காலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 – குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீதியில் தனியன் யானை ஒன்று வீட்டு காணிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை […]

Continue Reading

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று (08) மாலை அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்றது. கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணியானது கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் இன்றும் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம்!

அகுங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து உரிய அனுமதியின்றி வெளியே அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 கைதிகள், கடந்த முதலாம் திகதி சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலையின் வெளிப்புறப் பகுதியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதன்போது அவர்களில் 4 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்தார். சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியோ அல்லது ஆலோசனையோயின்றி இந்த கைதிகளை சுத்தப்படுத்தும் […]

Continue Reading