போதைப்பொருட்களுடன் பல்கலை மாணவர்கள் கைது

25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு மாலம்பே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக […]

Continue Reading

வன விலங்குகளை வேட்டையாடி முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற இருவர் கைது

வன விலங்குகளை வேட்டையாடி முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக மடாட்டுகம பொலிஸார் தெரிவித்தனர். மடாட்டுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரம், மடாட்டுகம, எலகமுவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மடாட்டுகம மற்றும் நுககஹவத்த ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 23 மற்றும் 37 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து, வேட்டையாடப்பட்ட 02 […]

Continue Reading

ஒரு கோடி ரூபாவுக்கு வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்றவர் கைது

மாத்தறை, திஹகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அபரெக்க அதிவேக வீதிக்கு அருகில் அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றை ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக […]

Continue Reading

காணாமல் போயிருந்த நபர் வயலிலிருந்து சடலமாக மீட்பு!

மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒவிலிகந்த பிரதேசத்தில் உள்ள வயலிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை ஒவிலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது மாத்தளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி சென்ற பேருந்தும் வட்டவளை பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும் ஒருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Continue Reading

யாழில் கிணற்றில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சோதிலிங்கம் மிதுர்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடியவேளை அவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Continue Reading

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும் – சம்பிக்க

தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் அரசாங்கத்துக்கு பாரிய சவாலாகும். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும். நாட்டின் நிதி நிலைமை குறித்து மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2022 […]

Continue Reading

மன்னாரில் வெள்ள நீரை வெளியேற்றக் கோரி போராட்டம்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி ஞாயிற்றுக்கிழமை (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த கிராமத்தில் 108 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குறித்த கிராமத்திற்குச் செல்லும் பாதைக்கு அமைக்க […]

Continue Reading

கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த வியாழக்கிழமை(21) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார். சம்பவ தினமன்று வேகமாக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் அம்மாணவன் கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் உயிரிழந்திருந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய பாரூக் முஹம்மது சீத் என அடையாளம் […]

Continue Reading

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரனுகொடுவத்த பிரதேசத்தில் , ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து, 05 கிராம் 700 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான , […]

Continue Reading

10 விகாரைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

இரத்தினபுரி மாவட்டத்தில் பத்து விகாரைகளை உடைத்து இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட பல பொருட்களை திருடிய நபருடன் வாழ்ந்த பெண்ணொருவரும் தனியார் பஸ் சாரதியும் பெல்மடுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாரைகளின் தர்ம மண்டபங்களுக்கு வெளியில் இருந்த ஒலிபெருக்கிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை இக்குழுவினர் திருடிச் சென்றுள்ளனர். இந்த திட்டமிட்ட திருட்டுக்கு நீண்ட தூர தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் உதவியையும் பிரதான சந்தேக நபர் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக […]

Continue Reading

தொல்பொருள் அகழ்வுக்கு ஆயத்தமான 11 பேர் கைது

தொல்பொருள் பெறுமதியான பகுதியை அகழ்வதற்கு அல்லது அகழ்வாராய்ச்சி செய்யவந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு இராணுவத்தினர் உட்பட பதினொரு பேர் கைது செய்யப்பட்டதோடு மூன்று கார்கள் மற்றும் ஒரு கெப் வண்டி வெலிகந்த நாமல்கம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். இராணுவத்தில் பிரிகேடியர் அணியும் சீருடை மற்றும் போலி அடையாள அட்டை, இராணுவ ஆடை பகுதிகள் ஒரு தொகை மற்றும் போலி அடையாள அட்டையை வைத்திருந்த சந்தேக நபர் பதுளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஏனைய இருவரும் […]

Continue Reading