முல்லைத்தீவில் தீ விபத்து: முதியவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – சிலாவத்துறை பகுதியில் தீ விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முல்லைத்தீவு – சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் ஆவார். உயிரிழந்த முதியவர் தனது மகனின் வீட்டுக்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.  இந்நிலையில், கடும் மழையினால் ஏற்பட்ட குளிரை எதிர்கொள்ளும் வகையில் வெப்பமூட்டுவதற்காக வீட்டுக்குள் தீ பற்ற வைத்துள்ளார்.  இதன்போது தீ பரவியதால் இந்த […]

Continue Reading

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாசேனகம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிப  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ  பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மஹாசேனகம பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிப  பெண் ஆவார்.  இந்த வயோதிப  பெண் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Continue Reading

“ஃபெஞ்சல்” புயல் தாக்கம்: காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (30) காற்றின் தரம் குறைவடையலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.  நாட்டில் சில பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 92 – 120 வரை காணப்படலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, குருணாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை […]

Continue Reading

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இளைஞன் பலி

மஹரகம – பமுனுவ வீதியில் பமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதி பின்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் […]

Continue Reading

கொழும்பில் ரூ.40 லட்சம் பெறுமதியான மஞ்சள் தொகை மீட்பு!

கொழும்பு 15 இல் உள்ள தனியார் களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோ கிராம் மஞ்சள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையின் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபா என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பற்றுச்சீட்டு இல்லாமல், எந்தத் தகவலும் குறிப்பிடப்படாமல் சந்தையில் விற்பனை செய்வதற்கு […]

Continue Reading

பதுளையில் மின்சாரம் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

பதுளை, ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திகல்ல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்தவர் ஹாலிஎல, திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வயோதிபர் ஆவார்.  உயிரிழந்த வயோதிபர்  தனது பயிர்களைக் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக வயலை சுற்றிப் பொருத்தியிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

தம்புள்ளை நகரத்தில் வயோதிபர் சடலமாக மீட்பு

மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

ஐந்து மாத குழந்தையின் தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு 

ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் […]

Continue Reading

வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளையுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் நாளை வழமையான வேலை நாளாக திறக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை […]

Continue Reading

இந்தோனேசியாவில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலி

ஜகார்த்தா:30 இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டன. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட […]

Continue Reading

லஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முறைப்பாட்டாளரால் குளிரூட்டியை கொள்வனவு செய்த விற்பனை நிலையத்தின் முகாமையாளரின் கணக்கில் […]

Continue Reading

சாதனை படைக்க வயது தடையல்ல: `புஷ்-அப்’ செய்வதில் கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி

சாதனை படைக்க வயது தடையல்ல என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் மூதாட்டி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ்-அப்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கனடாவை சேர்ந்தவர் டோனாஜீன் வையில்டின். 59 வயதான இவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார். ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்கிற […]

Continue Reading