நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் இந்த விசேட உரையின் போது ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார். இதேவேளை 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்தாலும் எதிர்க்கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வராமையானது ஜனாதிபதியின் அந்த முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

Continue Reading

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் அவசியம்: அமைச்சர் சந்திரகாந்தன்

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், நாட்டில் நல்லிணக்கம் ஸ்தீரப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான பிழையான கண்னோட்டத்திலிருந்து பெரும்பான்மையின மக்களும் வெளியே வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தெற்கு மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் வடக்கு கிழக்குத் தொடர்பில் கொண்டிருக்கின்ற பார்வைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். குறிப்பாக வடக்கு […]

Continue Reading

13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவது சிறந்தது: விமல் வீரவன்ச

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் என்று நாம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றோம். இந்த எச்சரிக்கையை மீறி ஜனாதிபதி செயற்படக்கூடாது. நாட்டில் தற்போது 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கின்றது. எனவே, […]

Continue Reading

கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து 2000 ஏக்கர் அடி நீரை மகாவலி பகுதிகளுக்கு விடுவிக்க நடவடிக்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து 2000 ஏக்கர் அடி நீரை மகாவலி பகுதிகளுக்கு விடுவிக்க இலங்கை மகாவலி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் கலா வாவி, நாச்சதுவ மற்றும் தம்புலு ஓயா ஆகிய பகுதிகளுக்கு நீர் திறந்து விடப்படவுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால தெரிவித்துள்ளார். பொல்கொல்லயிலிருந்து போவதென்ன வரை சுரங்கப்பாதை ஊடாக நீர் கொண்டு செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, சிறுபோகத்திற்காக விடுவிக்கப்படும் […]

Continue Reading

கொழும்பு அணிக்கு 189 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் காலி மற்றும் கொழும்பு ஆகிய அணிகள் மோதி வருகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக டிம் சீஃபர்ட் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்தநிலையில், கொழும்பு அணி 189 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி […]

Continue Reading

கிழக்கு சீனாவில் நிலநடுக்கம்: 21 பேர் காயம்

சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து தெற்கே 300 கிலோமீற்றர் (185 மைல்) தொலைவில் உள்ள டெசோ நகருக்கு அருகே இன்று அதிகாலை 2:33 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 126 வீடுகள் இடிந்து விழுந்து 21 பேர் காயமடைந்தனர் என்று சீன மத்திய தொலைக்காட்சி மற்றும் பிற செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. […]

Continue Reading

மக்களால் தாங்க முடியாத அளவு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு: வசந்த அத்துகோரள

மக்களால் தாங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். பணவீக்கம் தொடர்பில் சனத்தொகை புள்ளிவிபர திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உணவு அல்லாத பொருட்களின் விலை மட்டம் 87 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார். நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மட்டத்தில் சராசரியாக நூற்றுக்கு மூன்று வீத அதிகரிப்பு […]

Continue Reading

விவசாயிகளுக்கு நீர் வழங்க அமைச்சரவை அனுமதி

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து உடவளit நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் தேவையான அளவு நீரை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்றுத் தீர்வுகளைக் காணும் அதேவேளையில் சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத் தேவைகளுக்காக தேவையான அளவு நீரை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

Continue Reading

மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி

மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Continue Reading

சிலி நாட்டு கடற்கரையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

கடல்வாழ் உயிரினங்களில் மிக பெரியதாக நீல திமிங்கலம் இருந்து வருகிறது.  ஆழமான கடற்பகுதியில் இது வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் நீல திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.  இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த திமிங்கலம் எப்படி கரைக்கு வந்தது என்பது தெரியவில்லை. அந்த கடற்கரை பகுதியில் கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. இதனால் கப்பலில் மோதி அது கரைக்கு வந்ததா? அல்லது பருவநிலை மாற்றம் […]

Continue Reading

கந்தரோடை பகுதியில் லக்சுமி நாணயங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கி.பி. 1ஆம் – கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் , மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து கடந்த ஒரு மாத கால பகுதியாக கந்தரோடை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது , கி.பி. 1ஆம் – கி.பி. 3ஆம் நூற்றாண்டு கால பகுதிக்கு இடைப்பட்டதாக […]

Continue Reading

10 இந்திய மீனவர்கள் திருகோணமலையில் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு விசைப்படகுடன் 10 மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

Continue Reading