யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி!

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைத்து புனரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டள்ளது தமது ஆலயங்கள் மீள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான  நிதியுதவியை பெற்றுத்தருமாறும் ஒருதொகுதி ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த தரப்பினருக்கான காசோலைகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்து கலாசார திணைக்களத்தின் 2024 இற்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியே குறித்த ஒரு தொகுதி ஆலயங்களுக்கு […]

Continue Reading

26 வயதே ஆன கால்பந்து வீரர் திடீர் உயிரிழப்பு: சோகத்தில் ரசிகர்கள்

மான்டிநீக்ரோ நாட்டைச் சேர்ந்தவரும் மில்வால் எப்.சி. கால்பந்து கிளப்புக்காக விளையாடுபவருமான கோல் கீப்பர் மதிஜா சர்கிக்(26) இன்று காலை உயிரிழந்ததாக கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இறப்புக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவருடைய இறப்பு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading

இம்மாதம் இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை உறுதிப்படுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Continue Reading

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட மூவர் கைது

நுவரெலியா, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 36, 39 மற்றும் 44 வயதுடைய மூன்று நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் […]

Continue Reading

தலைமன்னாரில் கனிய மணல் அகழ்வு: மக்கள் எதிர்ப்பு

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கனிய மணல் அகழ்வு இடம்பெற்ற நிலையில் இன்று காலை ஒன்கூடிய மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களின் எதிர்ப்பிற்கு நெரடியாக சென்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் முறையற்ற விதத்தில் அபகரிக்கப்பட்ட காணியில் இந்த அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தது. இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த காணியில் […]

Continue Reading

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இருவர் கைது

நுவரெலியா, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த  37 மற்றும் 49 வயதுடைய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக […]

Continue Reading

கண்டியில் சக மாணவனை கத்தியால் குத்திய மாணவன்!

இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பாட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்கான மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 16 வயதுடைய பாடசாலை மாணவனே காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகராறுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனத் தெரிவிக்கும் பொலிஸாார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

கிண்ணியாவில் யானை தாக்கி ஒருவர் பலி

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிர் இழந்தவர் கிண்ணியா இடிமனையைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தராவார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  இளம் குடும்பஸ்தர் நேற்றைய தினம் இரவு தந்தையுடைய பண்ணைக்கு சென்ற வேலையில் அவரை மறைந்திருந்த யானை ஒன்று தாக்கியுள்ளது. இப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் நான்கு பேர் யானை தாக்கி  உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத […]

Continue Reading

செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடளித்த மாணவர்கள்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் இன்று சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர்.  பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக  காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவர்கள்  அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டவந்த […]

Continue Reading

போர் நிறுத்தத்திற்கு புடின் அழைப்பு

உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கிக் கொண்டால் மட்டுமே அது நேட்டோ உறுப்புரிமைக்கான திட்டங்களைக் கைவிடத் தயாராக உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி புடின் இதை குறிப்பிட்டார், மேலும் உக்ரைன் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், கிரெம்ளின் ‘தாமதமின்றி பேச்சுவார்த்தைகளை தொடங்க தயாராக […]

Continue Reading

இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கடன் வழங்கிய நாடுகளின் குழு கூட்டம் அடுத்த வாரம்

இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கடன் வழங்கிய நாடுகளின் குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அந்த சந்திப்பின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். சிலாபம் கிரிமதியான பௌத்த தேசிய பாடசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

களுத்துறையில் 1,080 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்பொல பகுதியில் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, மொரந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 1,080 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading