இலங்கை கிரிக்கெட் சபைக்கான புதிய யாப்பு வரைவு கையளிப்பு

இலங்கை கிரிக்கெட் சபைக்கான புதிய யாப்பு வரைவு இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய அரசியலமைப்பு வரைவு கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையை மறுசீரமைப்பதோடு, தேசிய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் நிர்வாகம், பயிற்சி மற்றும் வீரர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் இதில் உள்ளடங்கியுள்ளது.

Continue Reading

நிறுவனத்தில் தங்க நகை திருட்டு: சந்தேகநபர்கள் கைது!

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிறுவனமொன்றில் கடந்த 13 ஆம் திகதி தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்ட நகைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எத்துல்கோட்டை மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 52 […]

Continue Reading

தெற்கு கடல்பரப்பில் 150 கிலோ கிராம் போதைப்பொருளுடன் 6 பேர் கைது

மீன் பிடி இழுவை படகில் 150 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை  தென் கடல் பகுதியில் 400 கடல் மைல் தொலைவில் ஹெரோயின் கடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட இழுவை படகு கைப்பற்றப்பட்டது. இந்த இழுவை படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனை மேற்கொண்டதில் அதிலிருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

Continue Reading

இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!

சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.88 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவுப் செய்துள்ளது. இதேவேளை, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.45 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.62 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Continue Reading

போராட்டம் தற்காலிகமாக இடைநிறுதம்: புகையிர நிலைய அதிகாரிகள்!

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிர நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார் புகையிர பொது கண்காணிப்பாளருடனான கலந்துரையாடலின் போது, ​​எங்களின் சில கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் கிடைத்தன. ஆனால், பதவி உயர்வு மற்றும் பிற விவகாரங்கள் குறித்து எங்களால் குறிப்பிட்ட பதில் அளிக்க முடியாததால், செயல் அமைச்சர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடினார். அத்துடன் அமைச்சரவைப் பத்திரத்திற்கும், அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கும் […]

Continue Reading

சீனாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு: 27 ஆயிரம் பேர் வெளியேற்றம்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் 386 நகரங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவானது. இதனால் நான்பிங், சான்மிங் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 3 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக 27 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் […]

Continue Reading

பண்டாரகமவில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மூவர் காயம்

பண்டாரகமை – கெஸ்பேவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (14) வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டியானது முற்றிலும் சேதமடைந்துள்ளது.

Continue Reading

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் கைது!

வெளிநாட்டில்  தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன்  மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர் .    கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது இவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.   உள்ஹிட்டிய கிரந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மீனவர் ஒருவரே இவ்வாறு கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .  சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Continue Reading

சம்பா – கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பருவத்தில் கீரி சம்பா, சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் மூலம் தரமான அரிசியை பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் அனுராதா தென்ன கோன் தெரிவித்துள்ளார். அரிசி தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலை 320 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக சம்பா அரிசிக்கான தட்டுப்பாடும் தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துள்ளது. […]

Continue Reading

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்த நபர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் யாழ். வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் […]

Continue Reading

தனித்துவமான பிரபஞ்ச நிகழ்வு: அமீரக வானில் தென்பட்ட ‘ஹாம்பர்கர் விண்மீன்’

அமீரக வானில் தொலைநோக்கியில் காணும்போது இரு தட்டுகள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு ஒரு சாண்ட்விச் தோற்றத்தில் காணப்படும் விண்மீன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபி சர்வதேச வானியல் மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:- அமீரக வானில் மிக நெருக்கமாக 2 ஒளிரும் தட்டுகள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டது போன்று சாண்ட்விச் தோற்றத்தில் விண்மீன் கூட்டம் தென்பட்டது. தொலைநோக்கி கேமரா மூலம் இந்த காட்சி புகைப்படமாக பதிவு செய்யப்பட்டது. நெருக்கமாக பார்க்கும்போது ஹாம்பர்கர் […]

Continue Reading

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் முற்றுகை

நுவரெலியா சாந்திபுர பகுதியில் வைத்தியர் போல் நடித்து ஒரு வருடத்திற்கு மேலாக நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த நபர் ஒருவரின் சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையம் ஒன்றும் சுற்றிவளைத்துள்ளனர். நுவரெலியா விமானப்படை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் பல தடவைகள் சிகிச்சை பெற்ற ஒருவரை பயன்படுத்தியே குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருந்தகத்திற்கு எதிராக நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுடன் இணைந்து மருந்தகத்துக்கு சீல் வைக்கப்பட்டு […]

Continue Reading