குவைத் தீ விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒரு இந்தியர் பலி: பலி எண்ணிக்கை 50 ஆனது

குவைத் சிட்டி,15 குவைத்தில் கடந்த 12-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பலியாகி இருந்தனர். மேலும் சுமார் 50 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 45 பேர் இந்தியர்கள், 3 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள் ஆவர். ஒரு உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் நேற்று இந்தியா கொண்டு வரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இந்தியர் […]

Continue Reading

பொன்னான வாய்ப்பு கிடைத்தது – எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர்: அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட பொன்னான வாய்ப்புகள் பல கிடைத்திருந்தது. அவ்வாறான சிறந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மை தவிர தமிழ் தரப்பிலிருந்த ஏனைய அனைவரும் நிராகரித்திருந்தனர் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுவே தமிழ் மக்களின் இன்றைய சாபக்கேடான நிலைக்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு […]

Continue Reading

கொஹுவல வீதிக்கு மட்டுப்பாடு!

கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக இன்று (15) முதல் குறித்த வீதியூடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, குறித்த வீதியில் வாகன போக்குவரத்து 02 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கொழும்பில் இருந்து பிலியந்தலை செல்லும் வீதியில் கொஹுவல சந்தியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது ஓகஸ்ட் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதனால், […]

Continue Reading

தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்கள்!

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்ட பெண்கள், ஆண்கள் ஆகிய இருசாராரிடமிருந்தும் விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்படிவம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தின் “Our Services” இன் கீழ் உள்ள “Online Applications – Recruitment Exams” எனும் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பப்படிவங்களை நிகழ்நிலை (Online) முறையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் நேற்று […]

Continue Reading

இத்தாலி நாடாளுமன்றத்தில் மந்திரி மீது தாக்குதல் முயற்சி: எம்.பி.க்கள் கைகலப்பில் ஒருவர் படுகாயம்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா மெலானி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்குவது குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை ஆதரித்து பிராந்திய விவகாரங்கள் துறை மந்திரி ராபர்டோ கால்டெரசி பேசினார். அப்போது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் என கூறி இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மசோதாவை கைவிட வேண்டும் என கோரி அவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இந்தநிலையில் எதிர்க்கட்சி எம்.பி.யான லியானார்டோ […]

Continue Reading

இம்மாதம் இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.  ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை உறுதிப்படுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Continue Reading

கடைசி பந்தில் ரன் அவுட்: நேபாள அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை நேபாளம் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 43 ரன்களும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களும் எடுத்தனர். நேபாளம் அணி […]

Continue Reading

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் ஆளுநருடன் – உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால், இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட்  நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் […]

Continue Reading

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்: அனந்தி சசிதரன்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டிடுவதற்கு தயார் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும்,  வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் அறிவித்துள்ளர். வடமராட்சி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 15 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்டு வருகின்ற சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசை உள்ளாக்க சர்வதேச அழுத்தம் […]

Continue Reading

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்!

மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும், அவைத் தலைவராக பதவி வகித்தவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளரும், 25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள துரை மதியுகராஜா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலான பலதரப்பட்ட அரசியல் மற்றும் தொழிற்சங்க அனுபவத்துடன் கூடிய முன்னணி தொழிற்சங்கத் தலைவரும் […]

Continue Reading

சம்பள அதிகரிப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளோம்: முதலாளிமார் சம்மேளனம்

தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படியுமின்றி 70% ஆல் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது. வியாபார நிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கும் தொழிலாளர்களின் […]

Continue Reading

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான முக்கிய கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் ஊடாக சிறில் ரமபோசா மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாட்டின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தமது உரையில் தெரிவித்துள்ளார்.

Continue Reading