டிப்பர் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் – மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவத்தில் சேனையூர் 6ம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சேனையூர் – மயிலிமலை பகுதியில் உடைக்கப்படும் கற்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வரும் டிப்பர் வாகனமே மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த டிப்பர் வாகனம் […]

Continue Reading

பொலிஸ் உத்தியோகத்தரை மோதிவிட்டு தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் மோதி காயப்படுத்தி விட்டு தப்பியோடிய சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் பிரபல பாடசாலை ஒன்றின் முன் கடமையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் மோதி காயப்படுத்தி விட்டு தப்பியோடியுள்ளார். குறித்த நபர் தப்பி ஓடிய போதிலும் அவர் செலுத்தி […]

Continue Reading

பாகிஸ்தான், ஈரானிய பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த தீர்ப்பை வழங்கினார். கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இலங்கைக் கடற்பரப்பிற்குள் 123 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் […]

Continue Reading

ஒக்டோபர் 5ம் திகதி தேர்தல் – அமைச்சர் ஹரின்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கையில் மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை!

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இன்றைய தினம் (14) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23, 875 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 191,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 22 கரட் தங்கம் ஒரு கிராமின் […]

Continue Reading

நீதிமன்றம் செல்ல பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தீர்மானம்

தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படையுமின்றி 70 வீதத்தால் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் […]

Continue Reading

வேலைத் திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி! IMF எச்சரிக்கை!

புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைக்குமானால் அது நாட்டின் நலனிற்குப் பாதகமாகவே அமையுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெற்ற பின்னர் புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைப்பதற்கான வாயப்புகள் ஏற்படுமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் மறுசீரமைப்பு விடயங்கள்இ வரிகளின் குறைப்புஇ அதற்கான வாய்ப்புகள் காணப்படுமா என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான […]

Continue Reading

செஞ்சோலை காணியை உாிமையாளா்களுக்கு வழங்குவதில் சிக்கல்!

செஞ்சோலை மற்றும் அறிவுச்சோலைக்கு சொந்தமான காணிகளை உரியமையாளர்களிடம் கைளிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது. கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலேயே இவ்வாறு கலந்துரையாடப்பட்டிருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளிடமிருந்த காணிகள் உரிமையாளர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருந்தன. முறையான உறுதிப்பத்திரங்கள் உள்ள உரிமையாளர்களுக்கு மீண்டும் அதனை வழங்கியிருந்தாக கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார். செஞ்சோலையிலுள்ள பிள்ளைகளின் நலன்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது. செஞ்சோலைக் காணிகளை […]

Continue Reading

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – கல்வி அமைச்சு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருடம் அதிகரிக்க முடியாது என கல்வி அமைச்சு உபவேந்தர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி சம்பள அதிகரிப்பு கோரி ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு இன்றுடன் 43 நாட்கள் பூர்த்தியாகியுள்ளன. இன்னிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல பல்கலைக்கழகங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனு. அத்துடன் சம்பளத்தில் 15 வீத வறு் வரி அறவிடப்படுகின்றமை மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள […]

Continue Reading

அநுர ஜனாதிபதியானாலும் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றியமைக்க முடியாது – விஜித ஹேரத்

தமது கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொது பேரணியில் பேசிய அவர், இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும், வீட்டு பொருளாதாரத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “சில நேரம் நினைத்துப் பார்க்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முடியவில்லை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் முடியவில்லை. […]

Continue Reading

இன்னும் மூன்றே மாதத்தில் கிரிக்கெட்டிற்கு தீர்வு – ஹேஷா விதானகே

இன்னும் மூன்று மாதங்களில் கிரிக்கெட்டினை அழித்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்திருந்தார். ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே; “.. ஜனாதிபதி, அமைச்சர்களான அலி அப்ரி, காஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சர்கள் கூட்டமொன்று கிரிக்கெட் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கைக்கு என்னதான் நடந்தது என தெரியாது. […]

Continue Reading

இரத்தினக் கற்களைத் தேடி குழிதோண்டிய தொழிலதிபர் உட்பட மூவர் கைது

மொரகஹாஹேன மொரட்டவாவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் இரத்தினக் கற்களைத்தேடி குழிதோண்டிய தொழிலதிபர் உட்பட மூவர் நேற்று (13) இரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, அப்பிரிவினருடன் மொரகஹஹேன பொலிஸாரும் இணைந்து இதற்கான சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து தண்ணீர் தெளிக்கும் மோட்டார், 2 கல் நொருக்கும் இயந்திரங்கள், மண்வெட்டிகள், கம்பி வடங்கள் மற்றும் பலியிடும் பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர். குறித்த தொழிலதிபர் தான் கட்டிய வீட்டின் குளியலறைக்கருகில் உள்ள அறையில் […]

Continue Reading