நீதிமன்றங்களின் சுயாதீன செயற்பாடு பாராட்டத்தக்கது; விஜயகலாவிற்கான மன்னிப்பிற்கு யார் பொறுப்பு??

நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றமை நல்லாட்சிக்கு கிடைத்த பாரிய வெற்றியென கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் எதிரிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது நீதி தேவதைக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வித்தியா கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமாரை மக்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படாது எச்சரிப்புடன் […]

Continue Reading

50 மில்லியன் கடன் வழங்க அனுமதி

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்கள் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது. கட்டிடங்களின் கூரைகளில் சூரிய ஒளியில் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் கருவிகளை பொருத்துவதற்கான வேலைத்திட்டத்துக்காக இந்த கடன் வழங்கப்படவுள்ளதாகவும், இலங்கையில் கடந்த இரண்டரை தசாப்தங்களாக அனைத்து தரப்பினருக்கும் மின்சாரத்தை வழங்கும் வகையில் மின்சாரத்துறை அபிவிருத்தி கண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இலங்கை இயற்கை மற்றும் மீள்சுழற்சிகளின் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருப்பதாக, ஆசிய அபிவிருத்தி […]

Continue Reading

வடக்குக் கிழக்கில் இராணுவம் அகற்றுவது நல்லதல்ல

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது உசிதமானதல்லவென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் ஒரு இலட்சத்து 80 இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனரென வடமாகாண முதலமைச்சர் கூறியதாக இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளித்த அவர், இராணுவத்தின் எண்ணிக்கை குறித்து எவருக்கும் பொய்யுரைக்கத் தேவையில்லை. வடக்கு கிழக்கில் ஒரு […]

Continue Reading

தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பம்

29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று முன்தினம் அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு அரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த, தேசிய இளைஞர் விளையாட்டு விழா நாளை பரிசளிப்பு வைபவத்துடன் நிறைவு பெறவுள்ளது. இதேவேளை, குறித்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில், விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தேசிய […]

Continue Reading

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கிறது அமெரிக்கா

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் நேற்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வெகுவிரைவில் இந்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும், அதன் பின்னர் இந்துமா சமுத்திரப் பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கும். அதற்கு ஒத்தாசை வழங்கும் வகையிலேயே இலங்கையின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினருக்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். […]

Continue Reading

வடக்கு மக்களைக் குறிவைக்கிறாரா பஷில்?

அரசியல் சந்திப்புக்களை நடத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வடமாகாணத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 2ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஷில் ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலையிலான பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய அரசியல் செயற்பாட்டளராக பஷில் ராஜபக்ஷ இருந்துவரும் நிலையில், உள்ளூராட்சி சபை தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்து களமிறங்கவுள்ளது. இதற்கு தமிழர் தரப்பின் […]

Continue Reading

அமளிதுமளியுடன் நிறைவடைந்தது கிழக்கு மாகாண சபை அமர்வு

இலங்கையில் இந்த வாரத்தில் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளிதுமளியுடன் நிறைவடைந்தது. நாளை மறுதினம் சனிக்கிழமை நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைகின்றது. நேற்றும் இன்றும் 86ஆவது அமர்வு நடைபெறுமென நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் வியாழக்கிழமையுடன் இறுதி அமர்வு முடிவடைந்துள்ளது. காலை அமர்வுக்கு துணை அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் மாலை அமர்வுக்காக சபை கூடியது. அவசர பிரேரனையொன்றை முன்வைத்து உரையாற்றிய […]

Continue Reading

தேர்தல்கள் குறித்த அச்சம் தேவையில்லை

அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் உள்ளுராட்சி மன்ற தேர்தலும் மார்ச் மாதமளவில் மாகாண சபை தேர்தலும் நடத்தப்படுவது தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லையென அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். பிரதேச சபை தேர்தல் தொகுதி முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால், மாகாண சபை தேர்தலையும் தொகுதி முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சட்ட ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

சர்வதேச தரத்தில் மனித உரிமைகள் பேணப்படும் – அரசாங்கம்

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை சர்வதேச தரத்துக்கு பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் க்றிஸ்தோபர் ஸ்டைலியானைட்ஸை சந்தித்திருந்த போது, அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தியதன் பின்னர், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சர்வதேசத் தரத்திற்கு முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருவதுடன், ஜெனீவா […]

Continue Reading

விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் புதிய கருத்து

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் மாற்றுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் பலவற்றை விடுவிக்கவும் பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வவுனியா மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் வசம் உள்ள பாடசாலைகள், ஆலயங்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல் விகாரைகள் சுகாதார நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று கல்வி […]

Continue Reading

43 இந்திய மீனவர்கள் இலங்கை வருகை

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளைக் கொண்டு செல்வதற்காக 43 இந்திய மீனவர்கள் வருகை தந்துள்ளனர். 07 படகுகள் மூலம் இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பை வந்தடைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடற்படையினரின் உதவியுடன் 43 இந்திய மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருந்து, தமது படகுகளை பழுத்துபார்த்த பின்னர் அவர்களது நாட்டிற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் […]

Continue Reading

தவறான சாட்சியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை – கோப் குழுத் தலைவர்

கோப் குழுவை தவறாக வழிநடத்தும் வகையில் சாட்சியளிப்பவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமென கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கோப் குழு மற்றும் பாராளுமன்றத்தின் நிலையியற் குழுக்களுக்கு முன்பாக அதிகாரியொருவர் சாட்சியளிக்கும் போது, சத்தியப் பிரமாணமாகவே சாட்சி வழங்குவதனால், மத்திய வங்கியின் விசாரணையின் போது அதிகாரியொருவர் அல்லது கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வேறு நிறுவனம் ஒன்றின் நபரொருவர் தவறான தகவல்களை வழங்கியிருந்தால், அது பாராளுமன்றத்தின் கோப் குழுவிற்கு வழங்கிய தவறான கருத்தாகும். எனவே, அதற்கு […]

Continue Reading