கரையோர ரயில் சேவையில் பாதிப்பு

அநுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்கும் ரஜரட்ட ரஜின கடுகதி ரயில் கொழும்பு கோட்டைக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர வீதியின் ஒரு வீதி தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், கடலோரப் பாதையில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே இப்பாலம் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பல்வேறு பகுதிகள் இணையும் பிரதான பாதையான ஏ9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே இப்பாலம் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து முடக்கப்படக்கூடும். இப்பாதை ஊடாக பயணிக்கும் வாகனங்கள் அதிக எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்வதனாலேயே இப்பாலம் உடையக்கூடிய நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

Continue Reading

தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை தொடர வேண்டும் – ரணில்

தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நகரில் அமைந்துள்ள பழைய கோட்டை உட்பட பல அரச மாளிகைகளுக்கு விஜயம் செய்துள்ளார். இந்தியாவின் தூய்மையான நகரங்களின் தரவரிசைப்படி […]

Continue Reading

பாதிக்கப்பட்டவர்களை இலக்குவைத்து புதியமோசடி – பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மற்றும் சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக தடுப்பு பொலிஸ்பிரிவின் போலி இலச்சினை ஆகியவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பெறும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். இது குறித்து பொலிஸ்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது பொலிஸார் துஸ்பிரயோகத்திற்குள்ளானவர்கள் முறைப்பாடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கத்தினை அறிமுகம் செய்துள்ளனர். சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக தடுப்பு பொலிஸாரே இதனை அறிமுகப்படுத்தியுள்ளனர். மிக கடுமையான நம்பகதன்மையை பேணியே விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.பணியில் உள்ள பொலிஸார் இந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக […]

Continue Reading

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குருமுல்ல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், அடபாகே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் ஆவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, இறந்தவர் வேறொருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து மிளகு பறிக்கச் சென்ற போது, காணியைச் சுற்றி போடப்பட்டிருந்த அனுமதியற்ற மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் ,சட்டவிரோதமான […]

Continue Reading

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய (29) தினம் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 211,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 195,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணானது 209,000 ரூபாவாக, 22 கரட் தங்கம் ஒரு பவுணானது […]

Continue Reading

கோடரியால் வெட்டி மனைவி கொலை; கணவன் தப்பியோட்டம்!

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்ல கதிர்காமம் ரஜ மாவத்தை பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. செல்ல கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதாகவும், கொலையின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை […]

Continue Reading

ஹோமாகம துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஹோமாகம வைத்தியசாலை வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை முயற்சி, பலத்த காயம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொழும்பு மற்றும் […]

Continue Reading

ராஜித சேனாரத்னவுக்கு விடுதலை

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் மூலம் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரபட்சம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற […]

Continue Reading

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 4155 குடும்பங்களைச் சேர்ந்த 13251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1139 குடும்பங்களைச் சேர்ந்த 3903 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 2141 குடும்பங்களைச் சேர்ந்த 6431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 வீடுகள் […]

Continue Reading

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான குறித்த நபர் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று (29) திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட […]

Continue Reading

மலையக ரயில் சேவை பாதிப்பு

மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக மலையக ரயில் சேவையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் நான்காவது நாளாக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று (28) கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் இரவு தபால் ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது

Continue Reading