13 ஆக அதிகரித்துள்ள சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அந்த நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது இதன்படி 100,032 குடும்பங்களை சேர்ந்த 441, 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 38,616 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading

திருகோணமலை மாவட்டத்தில் 3,372 குடும்பங்கள் பாதிப்பு; ஒருவர் பலி!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வியாழக்கிழமை (28) வரை 3,372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த மாவட்டத்தில் 14 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 254 குடும்பங்கள் தங்க […]

Continue Reading

17 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,776,889 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 357,279 ஆகும். இது தவிர, ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், அவுஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Continue Reading

500 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு படகுகள் பறிமுதல்!

இலங்கைக் கொடியுடன் இரண்டு படகுகளில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் பயணித்த குறித்த இரண்டு படகுகளும் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டன. சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மற்றும் இரண்டு படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

Continue Reading

நான் பெற்ற அனைத்து நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்படும் – அமைச்சர் சுனில்

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் இவ்வருட இறுதிக்குள் இலாபகரமாக மாற்றுவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (28) இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ஆகியோரும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு விஜயம் […]

Continue Reading

நாவலப்பிட்டியில் மண்மேடு சரிவு – போக்குவரத்து பாதிப்பு

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. அத்துடன், நாவலப்பிட்டியின் பல பகுதிகளில் மரங்கள் மண்மேடு இணைந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான நிலையமாக செயற்பட்டுவரும் நிலையில் அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த 57வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த பொலிஸ் அதிகாரி பாடசாலையில் கடமையில் இருந்துள்ளதாகவும், இதன்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

யாழ் ராணி சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது என புகையிரத திணைக்கள வட்டாரங்கள் அறிவித்துள்ளன. என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் இந்தச் சேவையை நடாத்த முடியாதிருப்பதாக பிராந்திய புகையிரத முகாமையாளர் அறியத்தந்தார். அதனை இரத்மலானைக்கு அனுப்பியே சீர்செய்ய முடியும் என்றும், அதற்கு எத்தனை நாள் எடுக்கும் எனக் கூற முடியாது எனவும் அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது தீவிர முயற்சியால் இந்தச் சேவை […]

Continue Reading

சேதமடைந்த விளைநிலங்கள் – இழப்பீடு வழங்கும் முறை

அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த நாமல் கருணாரத்ன; நெல், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் ஆகிய 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. மேலும், அரச திறைசேரியில் உள்ள பணத்திற்கு இழப்பீடு […]

Continue Reading

நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்!

அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர் நேற்று (28) கைது செய்யப்பட்டனர். கைதான சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ரி சபீர் அகமட் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது மதரசாவின் அதிபர், ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் […]

Continue Reading

ராஜாங்கனை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு!

மோசமான வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 11,800 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த நீர் நிலையை அண்மித்த மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் தொடர்ந்து வடிந்து வருகின்றது. […]

Continue Reading

பொத்துவிலில் நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28) மாலை முதலை பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் இருந்து எருமை மாடுகளை கரைக்கு கொண்டுவரும் போது குறித்த நபரை முதலை பிடித்து இழுத்து செல்லப்பட்டதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பசரச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே இந்த சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளார். காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிசார் மற்றும் […]

Continue Reading