பலத்த காற்றுடன் பல தடவைகள் மழை – இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் […]

Continue Reading

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும் – செஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டங்களை ஒருபோதும் மாற்றியமைக்க போவதில்லை.தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை தொடர்வது நாட்டுக்கு அத்தியாவசியமானது. பொருளாதாரத்தின் மீது சர்வதேசமும்,நாட்டு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தும் வகையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக போலியான வாக்குறுதிகளை வழங்க போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நிதி அமைச்சின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

Continue Reading

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு – திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார். அவசியம் ஏற்படுமாயின் இந்தப் புதிய யாப்பில் திருத்தங்களைச் செய்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த இதனைத் தெரிவித்தார். “தற்போது, அரசாங்கம் “உறுமய” மற்றும் “அஸ்வெசும” உள்ளிட்ட […]

Continue Reading

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பலி

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் (13) இரவு 7 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மன்னார் – முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயி தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார். இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த […]

Continue Reading

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் – நகை மற்றும் பணம் திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் (13) மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டுக் கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டிலிருந்த […]

Continue Reading

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும் – பொலிஸ்மா அதிபர்!

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை முற்றாக ஒழிப்பதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல சுஹ_ருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த செயற்பாட்டின் மூலம், இது வரையில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட […]

Continue Reading

தென் கொரிய நூடுல்ஸ் வகைக்கு டென்மார்க் தடை

தென் கொரிய நூடுல்ஸ் (Noodles) வகை ஒன்றிற்கு டென்மார்க் தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  தென் கொரியாவிலுள்ள பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமொன்று, உலகின் அதிக காரமான சுவை கொண்ட நூடுல்ஸை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.  உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடுல்ஸிற்கு கேள்வி அதிகரித்து வருகின்றது.  எனினும் இந்த நூடுல்ஸில் அளவிற்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் டென்மார்க்கில் குறித்த வகை நூடுல்ஸிற்கு தடை […]

Continue Reading

கின்னஸ் சாதனை படைத்த உலகின் குள்ளமான ஜோடி

கின்னஸ் உலக சாதனை அமைப்பு குறிப்பிடத்தக்க சிலரது சாதனைகளை தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அந்த அமைப்பு, உலகின் குள்ளமான ஜோடியின் திருமணத்தை அங்கீகரித்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள். பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 […]

Continue Reading

இதுவரை 15 லட்சம் பேர்: ஹஜ் பயணிகளால் நிரம்பி வழியும் மெக்கா

மெக்கா:13 முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் […]

Continue Reading

பணிநீக்கம்: எல்லாத்துக்கும் காரணம் எலான் மஸ்க் தான்.. வெளியான புது தகவல்

2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அப்பொழுது அவரது நெருங்கிய நண்பர்களான ஸ்டீவ் டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் மஸ்க்- ஐ டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் நாம் தரும் சம்பளத்திற்கு தகுதியானவர்களா? என்று ஆராய கூறினார். அதன்படி டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார். இந்த முடிவு காரணமாக ப்ராடக்ட் அண்ட் டிசைன் பிரிவில் பணியாற்றி வந்த […]

Continue Reading

இந்தோனேசியாவில் வடக்கு சுலாவேசியில் நிலநடுக்கம்- ரிக்டரில் 5.9 ஆக பதிவு

இந்தோனேசியா:13 இந்தோனேசியாவில் வடக்கு சுலாவேசி என்ற பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12:01 மணியளவில் தலாட் தீவுகளின் வடமேற்கே 41 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 32 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Continue Reading

நண்பரின் பதிவால் வாலிபருக்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் மெல்வின் புருக்ஸ். இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு வாங்கி இருந்தார். அதில் அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3.34 கோடி பரிசு விழுந்தது. இதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில், எனது நண்பரின் வலைதள பதிவு ஒன்றை பார்த்தேன். அதில் அவருக்கு லாட்டரியில் 100 டாலர் கிடைத்ததாக பதிவிட்டிருந்தார். எனவே நானும் லாட்டரி வாங்க […]

Continue Reading