டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய வீரர்களின் ஐபிஎல் 2025 சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பெருமளவு எதிரொலித்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களை பல்வேறு அணிகளும் அதிக தொகை கொடுத்து வாங்கின. அந்த வகையில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் சமீபத்திய ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எந்த தொகைக்கு எடுக்கப்பட்டனர் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். இதுவரை […]

Continue Reading

தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்கள் 3 பேர் கைது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் மேட்ச் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர். 2016 மற்றும் 2017 க்கு இடையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட 7 […]

Continue Reading

42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.  அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் பவுமா 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் […]

Continue Reading

191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

டர்பனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கியது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 20.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட முதல் நாள் ஆட்டம் மதிய நேர […]

Continue Reading

சி.எஸ்.கே. தீமில் ரெடியான விமானம்

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெக ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதன்மூலம் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தை மையமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் […]

Continue Reading

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் 9 ஆண்டுகள் விளையாடியது குறித்து உருக்கமாக பதிவிட்ட ரிஷப் பண்ட்

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது. கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி […]

Continue Reading

295 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெர்த் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ராவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 104 ரன்னில் சுருண்டது. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் […]

Continue Reading

218 ஓட்டங்களால் இந்திய அணி முன்னிலை!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதன்படி குறித்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் யசஷ்வி ஜெய்ஸ்வால் 90 ஓட்டங்களுடனும், கே.எல்.ராகுல் 62 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 150 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, அவுஸ்திரேலிய அணி 104 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்தநிலையில் இந்திய […]

Continue Reading

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த முதல் வெளிநாட்டு விக்கெட் கீப்பர்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்களும், பண்ட் 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. முன்னதாக […]

Continue Reading

ஸ்மித்தை கோல்டன் டக் அவுட்டாக்கியது ரெண்டே பேருதான்

முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 150 ரன்னில் சுருண்டது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். […]

Continue Reading

மோடிக்கு பேட் பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்

ஜார்ஜ் டவுன்:22 பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி […]

Continue Reading

நக்கலடிக்கும் வகையில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்: பதிலடி கொடுத்த பும்ரா

பெர்த்:22 இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா இல்லாத சூழலில் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார். இந்த போட்டிக்கு முன்னதாக நேற்று இரு அணிகளின் கேப்டகளும் ஒன்றாக இணைந்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். அதன்பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் […]

Continue Reading