தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்படுகிறது – த.தே.ம.மு குற்றச்சாட்டு (Video)

தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாள் சந்திப்பின் போது, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து […]

Continue Reading

வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம் (Video)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள், நேற்று (12) நுழைவதற்கு முயன்ற போது பொலிஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை நிறைவு செய்த பின்னர் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்ட போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இச்சந்தர்ப்பத்திலேயே பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு […]

Continue Reading