கோண்டாவிலில் ரவுடிகளால் ஒருவரது கை வெட்டப்பட்டது 4 பேர் படுகாயம்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது என்று பொலிஸார் கூறினர்.இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது.சம்பத்தில் வாகனங்கள் […]

Continue Reading

யாழில் இராணுவத்தின் 6 ஹெக்டேர் பச்சைமிளகாய் தோட்டம்

யாழ்ப்பாணத்தில் ராணுவ வீரர்களால் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் தளபதி – யாழ்ப்பாணம், மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேராவின் மேற்பார்வை மற்றும் அறிவுறுத்தலின் கீழ், இந்த மிளகாய் பயிரை ராணுவ வீரர்கள் பயிரிட நடவடிக்கை எடுத்தனர். தற்போது மிளகாய் பயிர் அறுவடை செய்யப்படுவதாகவும், இந்த ஆண்டு அறுவடை மிகவும் வெற்றிகரமாக நடைபெறுவதாகவும் தெருவிக்கப்படுகிறது. பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ-யாழ்ப்பாணம்) துருப்புக்களின் தேவைகளுக்கும், எதிர்காலத்திலும் சந்தைக்கு மிளகாய் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Continue Reading

பசில்லுக்காக 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பத்தமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றம் வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல தடவைகள் அழைப்பு விடுத்திருந்தார் என்றும் ஜகத் குமார தெரிவித்தார். எதிர்வரும் தினங்களில் பசில் ராஜபக்ஷ […]

Continue Reading

அரசியல் கைதிகளை விடுதலை திருப்தியில்லை : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின்பங்காளி கட்சிகள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்த விடயத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்களுக்கு பூரண திருப்தியில்லை. அரசியல் கைதியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுதாகரன் அவரது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இம்முறை விடுதலை செய்யப்படுவார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகியுள்ளது. அவரது மனைவி இறந்துள்ள நிலையில் பாட்டியிடம் வளர்ந்துவரும் சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நாகராசா விஸ்ணுகாந்தன் தெரிவித்தார். […]

Continue Reading

புகையிரத ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்

இன்று (30) காலை 8 மணி முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக புகையிரத இன்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வௌிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், உரிய பதில் கிடைக்காததால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் புகையிரத பயணிகளுக்கு […]

Continue Reading

செவ்வாய்க்கிழமை 1 717 கொரோனா தொற்று 45 இறப்புகள்

நேற்று (29) கண்டறியப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,717 ஆகவும், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 257,208 ஆகவும் அதிகரித்துள்ளது. 29ஆம் திகதி 45 பேர் கொரோனாவைரசால்   இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டில் மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியுள்ளது.அதன்படி, நாட்டில் கோவிட் தொற்று காரணமாக மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3,030 ஆக உயர்ந்துள்ளது.

Continue Reading

பேராசிரியர் நீலிகா மலாவிஜ் தடுப்பூசிகள் குறித்த சுயாதீன நிபுணர் ஆலோசனைக் குழுவிலிருந்து ராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழக மருத்துவ பீடம், மானிடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலாவிஜ், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தடுப்பூசிகள் குறித்த சுயாதீன நிபுணர் ஆலோசனைக் குழுவிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்படும் சினோவாக் கொரோனா தடுப்பூசி தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கான குழு தற்போது பணியில் உள்ளது என்று கூறப்படுகிறது.

Continue Reading

10 வாரங்களுக்குள் டெல்டா கொரோனா வைரஸின் திரிபு பரவும் அபாயம்

மக்கள் சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறினால், இன்னும் 10 வாரங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வியாபிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் வைரஸ் தொடர்பான நிபுணர்களால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தற்போது டெல்டா வைரஸ் குறிப்பிட்ட சிலரிடம் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நாட்டில் நடமாட்டத்தடை நீக்கப்பட்டாலும், இன்னும் முழுமையாக நாடு திறக்கப்படவில்லை. மக்கள் ஒன்று கூடுவதற்கும், விருந்துபசாரம் உள்ளிட்ட நிகழ்வுகளை […]

Continue Reading

பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான விடயங்களை ஆராயுமாறு கல்வி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Continue Reading

கைது செய்யப்படுவார்களா தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

சாதாரணமாக மக்கள் வெளியிடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும்போது கைது செய்யப்படுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் அவ்வாறு நினைவுகூர்பவர்கள் ஏன் கைது செய்யப்படாதிருக்கின்றார்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பு கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் நடந்தது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அரசாங்கப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல சரியான பதிலை அளிக்கவில்லை. எனினும் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் கட்டிடத் […]

Continue Reading

பசில் ராஜபக்ஷ அமைச்சராக நியமிக்கப்படுவாரா? அரசாங்கத்தின் அறிவிப்பு

பசில் ராஜபக்ஷ அமைச்சராக நியமிக்கப்படுவாரா? என்பது தொடர்பாக இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறுமா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் எனவும், மேலும், பஸில் ராஜபக்ஸ எவ்வாறு நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்வார், அவருக்கு என்ன பதவிகள் வழங்கப்படும் என்பவை முற்று முழுதாக ஆளுங்கட்சியின் உள்ளக விவகாரமாகும். இது தொடர்பில் சரியான முறையில் தீர்மானங்களை எடுத்து அதனை நாம் அறிவிப்போம். மக்கள் மத்தியில் இது தொடர்பில் […]

Continue Reading

கொக்குவிலில் வன்முறைக் கும்பல் அட்டகாசம்

கொக்குவில் மேற்கு பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கிருந்த பெறுமதியான பொருளிகளை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர். 6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் […]

Continue Reading