ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள இலவச போக்குவரத்து சேவை

நாளை மற்றும் நாளை மறுதினம் ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளச் செல்பவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெருவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்துபவர்கள் தமது தேசிய அடையாள அட்டை, ஓய்வூதிய கொடுப்பனவு அட்டை அல்லது திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் என்பவற்றைக் காண்பித்துப் பயணிக்க முடியும் எனப் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

காதர் மஸ்தானுக்கு அன்ரிஜன் பரிசோதனையில் சிக்கல்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள காதர் மஸ்தானுக்கு நாளையதினம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையில் கொரோனாவின் 3 வது அலையில் கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

வருகிறது ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி

ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகா (Yoshihide Suga) அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. ஜனாதிபதி அவர்களுக்கும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அக்கிரா (Sugiyama Akira) அவர்களுக்குமிடையில், இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. கொவிட் வைரஸ் தொற்றொழிப்பு, மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு ஜப்பான் […]

Continue Reading

வட மாகாணஆளுநர் தலைமையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

2021 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு நடைபெறும் அபிவிருத்திவேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாணஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச்செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலில் விசேட தேவைகளுடைய குழந்தைகளின்; வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வடமாகாண ஆசிரியர் வாண்மை விருத்தி […]

Continue Reading

யாழ் இளைஞன் செய்த TikTok வீடியோ – பொலிஸார் கைது

யாழில் TikTok பாவனை அதிகரித்துவரும் நிலையில் பலர் தமது வீடியோவை பதிவேற்றி வருகின்றனர். இந்நிலையில் கோப்பாயை சேர்ந்த இளைஞன் போட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக தெரியவருவதாவது வாயில் வாள் ஒன்றினை வைத்து ரிக் ரொக் (TikTok) காணொலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடம் […]

Continue Reading

சாணக்கியன் கேட்ட கேள்விக்கு நாமல் சொன்ன பதில்

பாடசாலை மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலவசமாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள் ஒன்றை எதிர்வரும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த புதிய மென்பொருளானது, நிகழ்நிலை (Zoom) மென்பொருளைப் போன்றது என்றும், இலங்கையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் […]

Continue Reading

கோவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதி ஒருவர் பலி

கோவிட் நோயாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த விவசாயி ஒருவர் மீது கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் வீதியில் […]

Continue Reading

சுன்னாகம் பகுதியில் திருட்டில் ஈடுபட்டவரை குற்ற தடுப்பு பிரிவினர் கைது!

பயணத்தடை அமுலில் உள்ள நிலையல் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலணி பகுதியில் இலங்கை மின்சார சபை கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் ஜன்னலை உடைத்து உட்புகுந்த கொள்ளையன் வீட்டில் இருந்த இரண்டரை பவுண் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபா  பணத்தினை எடுத்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை […]

Continue Reading

ஊரடங்கு மற்றும் தடுப்பூசி தொடர்பாக இராணுவத் தளபதியின் முக்கிய அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் கொரோனா தொற்று காரணமாக நாட்டின் முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில் உலக நாடுகளுடன் பொருளாதார, இராஜதந்திர மற்றும் சுமூகமான உறவுகளைப் பேண வேண்டியது […]

Continue Reading

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் திகதி வெளியாகியுள்ளது

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தது. ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட  அடியவர்களுடன் நடாத்துவதற்கு முன்னர் தீர்மாணம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம்  6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலையில் அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த தீர்மானத்தை […]

Continue Reading

யாழ். பல்கலைக் கழக நுண்கலைக் கழக அனுமதிக்கு இணைய வழி வாயிலாக பரீட்சைகளை நடாத்த ஏற்பாடு!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி / தெரிவுப் பரீட்சைகள் இணைய வழியாக இடம்பெறவுள்ளன.  நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அனுமதி / தெரிவுப் பரீட்சைகளை மாற்று ஏற்பாட்டின் படி இணைய வழியாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுடனான கூட்டத்தின் பின்னர் தீர்மானித்துள்ளது.  அந்தத் தீர்மானத்துக்கு அமைய […]

Continue Reading

அடுப்படியில் கள்ளச்சாராயம் காச்சியவர் கைது

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைநகர் ஊரி பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக அப்பகுதி கிராம சேவையாளரான மயூரனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து , பொலிஸாருடன் வீட்டினை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர். அதன் போது வீட்டினுள் அறை ஒன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றதை கண்டறிந்து , வீட்டில் இருந்தவரை கைது செய்தனர். அத்துடன் கசிப்பு உற்பத்தி […]

Continue Reading