அதிகரிக்கும் கொவிட் மரணங்கள் : பயணத்தடையில் மாற்றம் வருமா?

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காணப்படுவதுடன், கொவிட் மரணங்களும் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே அவர்கள் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகைதந்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பது பற்றிய தீர்மானம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தீர்மானிக்கும் எனவும் கடந்த […]

Continue Reading

சிறுவர்களுக்கு முகக்கவசம் அணியலமா? குழந்தை வைத்தியர் நிபுணரின் பதில்

பெற்றோர்களின் கண்காணிப்பில் சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (09) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே அவர்கள் தெரிவித்;துள்ளார். மேலும், முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதையும் முகக்கவசம் அணிவதை போன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Continue Reading

ஆகஸ்ட் மாதம் முதல் கல்வி நடவடிக்கையில் புதிய மாற்ம்

கொவிட் 19 காரணமாக வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மாணவர்களின் திறனை வளர்த்துக் கொள்வதற்காக புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துவதாக நேற்று (9) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Continue Reading

14ஆம் திகதிக்கு பின்னர் பயணத்தடை நீங்குமா? இராணுவத்தளபதியின் முக்கிய அறிவிப்பு

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கபடவுள்ளாதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. சமூக வலைத்தளங்களில் 14ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பதாக வெளியாகிவரும் தகவலானது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

செந்தில் தொண்டமானின் முயற்சியில் தியத்தலாவைக்கு புதிய PCR இயந்திரம்!

செந்தில் தொண்டமானின் முயற்சியில், தியத்தலாவைக்கு 65 லட்சம் ரூபாய் பெறுமதியான PCR இயந்திரத்தினை இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தினால் PCR இயந்திரம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜய பெட்டினால், இந்த இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள PCR இயந்திரம் தியத்தலாவை வைத்திய சாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும்,பிரதமரின் […]

Continue Reading

வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நெகிழவைக்கும் செயல்

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்புக்கு உள்ளாகிய 50 குடும்பங்களுக்கு வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட நிதியின் கீழ் உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இன்றைய தினம் தெல்லிப்பழை மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபர் சஞ்சீவ தர்மரட்ணவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. தெல்லிப்பழை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கும் கோப்பாய் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட […]

Continue Reading

வெளிநாட்டு மதுபானப் போத்தல்களை பொலிஸ்க்கு விற்க முற்பட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு மதுபானப் போத்தல்களை புலனாய்வு பிரிவினருக்கு விற்க முற்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது சுன்னாகத்தைச் சேர்ந்த சந்தேக நபருக்கு தொடர்பு எடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் தேவை எனத் தெரிவித்து ஆறுகால்மடம் பகுதிக்கு அழைத்துள்ளனர். அவரும் அதிகளவு விலைபேசி 6 மதுபானப் போத்தல்களுடன் வருகை தந்து அவற்றை சிவில் உடையில் இருந்த பொலிஸ் […]

Continue Reading

முல்லைத்தீவில் 32 ஏக்கர் காணியில் நடப்பது என்ன?

முல்லைத்தீவு மணல் அகழ்வு சம்பந்தமாக ஆயர் இல்ல அறிக்கை முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில் சட்டத்திற்கு புறம்பான வகையில் மணல் அகழ்வு நடக்கிறது என்ற செய்திகள் அண்மைக்காலமாக பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. யாழ். ஆயர் இல்லத்திற்கு சொந்தமான நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர்கள் காணிகள் இருப்பதாகவும் அவை போர் சூழுல் மற்றும் காரணிகளால் நீண்ட பல வருடங்களாக எவ்வித அபிவிருத்தியுமில்லாமல் இருப்பதாக முல்லைத்தீவு ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Continue Reading

யாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான விசேட அறிவித்தல்

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள் நாட்டில் நிலவும் COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்கள் ( பெயர் , கிளினிக் இல முழுமையான விலாசம் தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம்) என்பவற்றை அறியத்தந்தால் அம்மருந்துகள் உங்களுக்கு தபால் ழூலமாக எவ்வித கட்டணமும் இன்றி […]

Continue Reading