இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் 20 ரூபாவால் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகள் இன்று இரவு முதல் அதிகரிக்கப்படுவதாக எரி சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவாலும், ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 23 ரூபாவாலும்,ஒட்டோ டீசல் 7 ரூபாவாலும், சுப்பர் டீசல் 12 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 7 ரூபாவாலும் அதிகரிக்கபடவுள்ளது. அதன்படி ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 157 ரூபாவாகவும் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 184 ரூபாவாகவும் […]

Continue Reading

வட்டுக்கோட்டையில் சங்கிலி அறுப்பு விசாரணையில் பொலிசார்

வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. இன்று (11) வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் வட்டுக்கோட்டை – மாவடி கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பொன்னாலையைச் சேர்ந்தவரும் வட்டு. இந்துக் கல்லூரியின் மாணவியுமான ஒருவரின் தங்கச் சங்கிலியே அறுத்துச் செல்லப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மேற்படி மாணவியும் அவரது நண்பியும் பல்கலைக்கழக உளச்சார்பு பரீட்சைக்கு தோற்றுவதற்காக சங்கானை […]

Continue Reading

SLT MOBITEL நிறுவனத்தின் இடர்காலத்திற்கான சமூகப்பணி

SLT MOBITEL நிறுவனத்தின் கொவிட்19 இடர்காலத்திற்கான நிரந்தர வருமானமற்ற வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 90 குடும்பங்கு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவித்தலின் படி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஜெ141 மற்றும் ஜெ 144 ஆகிய கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 90 குடும்பங்களுக்கு, தலா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் யாழ் பொலிஸ் அத்தியட்சகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்,மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கிராம சேவகர், SLT MOBITEL […]

Continue Reading

உலக தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கான பிரதமரின் செய்தி குறிப்பு

உலக தொழிலாளர் எதிர்ப்பு தினமான ஜுன் 12 ஆம் திகதியை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் செய்திகுறிப்பொன்றை வெளியிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவிக்யைில் ‘குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்க – இப்போதே செயற்படுங்கள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் 2021ஆம் ஆண்டை குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்கும் சர்வதேச ஆண்டாக பெயரிடுவதற்கு இன்று முழு உலகமும் அணிதிரண்டு வருகிறது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகின்றேன். சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் உலகளாவிய நிலைத்தன்;மை இலக்காக […]

Continue Reading

சுகாதாரத் தொழிற் சங்க ஒன்றிணைப்பினர் போராட்டத்தில்

அரச தாதியர்கள் சங்கம் உள்ளடங்கலான “சுகாதாரத் தொழிற் சங்க ஒன்றிணைப்பு” இன்றையதினமும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம், துணை வைத்திய சேவை ஒருங்கிணைந்த அதிகார சபை, துணை வைத்திய சேவை ஒருங்கிணைந்த முன்னணி, அரச குடும் நல சுகாதார சேவை சங்கம், அரச தாதியர்கள் சங்கம், மேல் மாகாண சுகாதாரச் சேவை சாரதி சங்கம், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களின் சங்கம் மற்றும் அரச தொழிற்நுட்பவியலாளர் சங்கம் ஆகியன […]

Continue Reading

கொக்குவில் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு

யாழ் குடாநாட்டில் பயணத் தடையினை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை  கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண காவல்துறையினரால் தொடர்ந்து விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட  சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் காவல்துறையினரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Continue Reading

உடுவிலில் மோட்டார் திருடர்கள் ஊர் மக்களிடம் பிடிபட்டனர்

உடுவில் தொம்பை வீதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் கதவு கழற்றி உள்ளே புகுந்து மோட்டார் திருடி தப்பித்த இருவர் ஊர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டனர். ஓட்டுமடத்தைச் சேர்ந்த இருவரே இன்று நண்பகல் பட்டப்பகலில் வீடு புகுந்து மோட்டார் திருடி தப்பித்த வேளை சிக்கிக்கொண்டனர். வீட்டின் கதவு கழற்றிவிட்டு உள்ளே புகுந்த இருவரும் மோட்டார் நீர்ப்பம்பியைத் திருடிக் கொண்டு தப்பித்த வேளை வீட்டிலிருந்த பெண் கண்டுள்ளார். அவர் குரல் எழுப்பியதால் அயலவர்கள் கூடி திருடர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து நையப்புடைத்தனர். […]

Continue Reading

பயணத்தடை மேலும் நீடிப்பு : இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை 14 ஆம் திகதி தளர்வடையாது – 21 ஆம் திகதி வரை நீடிக்க அரசு தீர்மானம். எனினும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த அறிப்பு வெளியாகியுள்ளது. எனினும், நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

Continue Reading

எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading

ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பரபரப்பு தகவல்

நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வியாழனன்று மாத்திரம் இவ்வாறு ஒட்சிசன் தேவையுடைய 800 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேநிலைமை தொடருமாயின் அடுத்த இரு வாரங்களில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் பதிவாகக் கூடிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு வினைத்திறனான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற […]

Continue Reading

கப்பல் தீவிபத்து : அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானமையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் அமெரிக்க மக்கள் 1,00,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. பேர்ள் கப்பல் தீவிபத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் தாக்கங்களை தணிக்க உதவுவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க துணைநிலைத் தூதுவர் மார்ட்டின் கெலி , இந்த உடனடி உதவியானது வாழ்வாதாரங்களுக்கு உதவும் என்பதுடன், தற்போதைய இந்த நிலைமையை தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலையை சமாளிக்க […]

Continue Reading

கொரோனா ஊசியை ஏற்றிக்கொள்ளமாட்டேன் : தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பிய சஜித் அதிரடி அறிவிப்பு

கொவிட் -19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத காரணத்தினாலேயே எனக்கும் எனது பாரியாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஆனால் நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றிமுடிக்கும் வரையில் நான் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் குணமடைந்து நேற்று வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை கங்காராம விகாரைக்கு வழிபடச்சென்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் அங்கு ஊடகங்களுக்கு […]

Continue Reading